Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

முடிந்தவரை வாயை திறக்காமல் இருப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.06.2023

Nandhinipriya Ganeshan Updated:
முடிந்தவரை வாயை திறக்காமல் இருப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.06.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 20 ஆம் நாளுக்கான [03 ஜூன் 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

முடிந்தவரை வாயை திறக்காமல் இருப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.06.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர்க்கு லாபம் மேம்படும். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். துணையின் ஆசையை நிறைவேற்றி காட்டுவீர்கள். சிலர் தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

முடிந்தவரை வாயை திறக்காமல் இருப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.06.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக இழுபறியான சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களிடம் உங்க குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். விருப்பங்கள் நிறைவேறும் நாள். மனதில் தன்பிக்கை அதிகரிக்கும். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். நன்மை நிறைந்த நாள். உறுதி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

முடிந்தவரை வாயை திறக்காமல் இருப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.06.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

சந்தோஷத்திற்கு பஞ்சம் இருக்காது. தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.  பூர்வீக சொத்து விவகாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களால் ஆதாயம் ஏற்படும். வாகன பயணத்தின்போது மட்டும் கவனம் தேவை. முடிந்தவரை இரவு பயணத்தை தவிர்க்கவும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

முடிந்தவரை வாயை திறக்காமல் இருப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.06.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

சவால்கள் நிறைந்த நாள். பணியிடத்தில் சகஊழியர்களிடையே திறமையை நிரூபிக்க போட்டி போட்டு வேலை செய்வீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது சிறந்தது. சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும். எதிர்பாலினத்தவரிடம் பேசும்போது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சரியாக பேசினாலும் அது தவறாக தான் போய் முடியும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 6

முடிந்தவரை வாயை திறக்காமல் இருப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.06.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

நெருங்கிய நண்பர்களின் உதவியால் தொழில் வியாபாரத்தில் மாற்றம் உண்டாகும். நிறைவேறாத ஆசைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற தொடங்கும். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான நாள். ஒருசிலருக்கு வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். சிலருக்கு குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

முடிந்தவரை வாயை திறக்காமல் இருப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.06.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எதிர்கால எண்ணங்களால் குழப்பத்தோடே இருப்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மலை சம்பந்தமான இடங்களுக்கு செல்லும்போது கவனம் தேவை. பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. சகோதரர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு நீண்ட கழித்து மனதிற்கு பிடித்தவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

முடிந்தவரை வாயை திறக்காமல் இருப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.06.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உங்கள் ஆசைகள் நிறைவேறும் நாள். கணவன்-மனைவி இடையே பாசம், அன்பு, அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். சிலருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். முக்கியமான காரியங்களில் இருந்த சிக்கல்கள் குறையும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 3

முடிந்தவரை வாயை திறக்காமல் இருப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.06.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். தவறுகள் நேர வாய்ப்புள்ளதால், எந்த செயல்களையும் புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். வழக்கு சம்பந்தமான செயல்பாடுகளில் மற்றவர்களின் பேச்சை கேட்பதை தவிர்க்கவும். பிரியமானவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முடிந்த வரை வாயை திறக்காமல் இருப்பது நல்லது. சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கும் எண்ணம் கைநழுவி போகும். செலவுகள் மிகுந்த நாள். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1

முடிந்தவரை வாயை திறக்காமல் இருப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.06.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் பாராட்டு கிட்டும். பணியிடத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். கணினி தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வந்து சேரும். சிலரின் மூலம் வாழ்க்கை பாடம் கற்றுக் கொள்வீர்கள். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

முடிந்தவரை வாயை திறக்காமல் இருப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.06.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வேலை செய்யும் இடத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். அதேபோல், மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழிலில் சிலருக்கு அஜாக்கிரதை காரணமாக பண நஷ்டம் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களுடன் சண்டை ஏற்படும் நாள். அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும். கடவுள் வழிபாடு செய்வது நல்லது. கோபம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

முடிந்தவரை வாயை திறக்காமல் இருப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.06.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். பணியிடச்சூழல் சுமூகமாக இருக்கும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காதலர்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். செய்த தவறை உணரும் நாள். நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்பச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் அற்புதமாக இருக்கும். புதிய நபர்களிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை வேண்டும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 2

முடிந்தவரை வாயை திறக்காமல் இருப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.06.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறையால் குடும்பத்திலும், பிற இடத்திலும் உங்களின் மதிப்பு உயரும். பணப்புழக்கம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். காப்பீடு சார்ந்த விஷயங்களில் அனுகூலமான பலன் கிடைக்கும். எந்த செயலிலும் ஒரு உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். அன்புக்குரியவர்களுக்கு பரிசு வாங்கிக் கொடுப்பீர்கள். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்