Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கஷ்டமான செயலிலும், துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்..! | 05.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
கஷ்டமான செயலிலும், துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்..! | 05.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 22 ஆம் நாளுக்கான [05 ஜூன்2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.30 – 10.30 வரை

மாலை: 07.30 – 08.30 வரை

கஷ்டமான செயலிலும், துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்..! | 05.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

மற்றவர்களுடன் பேசும் போது நிதானமாக பேச வேண்டும். எந்த காரியத்திலும், சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். மூத்த சகோதரர் வழியில், உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். எல்லாவற்றிலும் மிகக் கவனமாகச் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில வெளியூர் பயணங்கள் ஏற்படும். இதனால், அலைச்சல் உண்டாகலாம். எனவே, மிகக் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இணையம் தொடர்பான துறைகளில் பொறுப்புகள் மேம்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் மதிப்பு உண்டாகும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

கஷ்டமான செயலிலும், துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்..! | 05.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பணியிடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, நிதானமாகவும், கவனத்துடனும் செயல்படுவது சிறப்பு. சகோதரர் வழியில் ஆதரவான சூழல் உண்டாகலாம். பொருளாதாரத்தில் சற்று வரவு குறைவாக இருக்கும். எனவே, சிக்கனமாகச் செலவு செய்வது நல்லது. சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும். மன அமைதியுடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் உண்டாகும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கஷ்டமான செயலிலும், துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்..! | 05.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

வியாபாரத்தில் சில எதிர்பார்க்காத முடிவுகள் கைகூடும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி நன்மைகள் உண்டாகும். எந்த காரியமாக இருந்தாலும், சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்ததில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். பொருளாதாரச் சேர்க்கை உண்டாகும். இருப்பினும், செலவு செய்வதில் மிகக் கவனத்துடன் இருப்பது நல்லது. முதலீடு சார்ந்தவற்றில் அதிக ஆர்வம் உண்டாகும். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

கஷ்டமான செயலிலும், துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்..! | 05.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

எதிர்காலம் சார்ந்தவற்றில் மிக அதிக யோசனை உண்டாகும். கலை சார்ந்த செயல்பாடுகளில் உங்களின் ஈடுபாடு அதிகமாக இருக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்து வந்த சிக்கல்கள் விலகி நன்மைகள் உண்டாகும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நீங்கள் எண்ணிய காரியங்களை விரைவாகச் செய்து முடிப்பீர்கள். சங்கம் தொடர்பான பணிகளில், உங்களுக்குப் புதிய வாய்ப்புகள் உண்டாகும். புதிய நண்பர்களால் ஆதாயம் பெருகும். உடல் நலம் சார்ந்தவற்றில் அதிக கவனம் தேவை. சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கஷ்டமான செயலிலும், துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்..! | 05.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பணி தொடர்பான விஷயத்தில் மிகக் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடனிருப்பவர்களிடம் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. திடீர் வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். இதனால், உடல் நலம் சார்ந்தவற்றில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆடம்பரமான பொருள்கள் மீதான இருந்த ஆர்வம் குறையும். உறவினர்கள் வழியில் நன்மைகள் உண்டாகலாம். காரியத்தில் குழப்பம் ஏற்படலாம். எனவே, தெளிவுடன் ஆழ்ந்து யோசித்து சிந்தனை செய்ய வேண்டும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

கஷ்டமான செயலிலும், துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்..! | 05.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எழுத்து தொடர்பான துறைகளில் அதீத ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் உதவியுடன் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி நன்மைகள் உண்டாகும். பணியிடத்தில் முக்கிய பொறுப்புகளை வகிப்பீர்கள். உங்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து, பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் எதுவும் இல்லை. பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கஷ்டமான செயலிலும், துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்..! | 05.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

வாழ்க்கைத் துணையின் உதவியால் மதிப்பு பெருகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி விடும். சொந்தத் தொழில் செய்வதற்கான முயற்சியில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவீர்கள். வாக்குறுதிகள் அளிப்பதில் மிகுந்த கவனம் தேவை. பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. நிர்வாகம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் காணப்படலாம். பணியிடத்தில் உங்களின் மதிப்பு மேலோங்கி, உயரதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

கஷ்டமான செயலிலும், துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்..! | 05.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உங்கள் முயற்சிக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளால், மிகப்பெரிய சாதனைகளைப் புரிவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டித் தேர்வர்களுக்கு இது உகந்த தினம் ஆகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். முக்கிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். இது உங்களுக்கு அனுகூலத்தைத் தரும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகி விடும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

கஷ்டமான செயலிலும், துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்..! | 05.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பொருளாதாரத்தில் வரவு உண்டாகும். லாபம் பெருகும். முதலீடுகளில் செல்வம் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகரிக்கும். தன வரவு சிறப்பாக உள்ளது. இருப்பினும், சிக்கனத்துடன் செலவு செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன், மனைவி இடையே அந்நோன்யம் அதிகரிக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கஷ்டமான செயலிலும், துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்..! | 05.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுக்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய பொருள்கள் வாங்குவதில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் ஆர்வம் உண்டாகும். பணியிடத்தில் உங்களின் பொறுப்புகள் அதிகமாகும். உயரதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மூத்த சகோதரர் வழி நன்மைகள் உண்டாகலாம். பயணத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

கஷ்டமான செயலிலும், துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்..! | 05.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

இளைய சகோதரர்கள் வழி நன்மைகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவர். உயரதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நிதானமாகச் செயல்பட்டு, எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகள் மேலோங்கும். உடன் பணிபுரிபவர்களிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். அனுகூலமான வெற்றி உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பர். உறவினர்கள் வழி நன்மைகள் கிடைக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 3

கஷ்டமான செயலிலும், துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்..! | 05.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

மனதளவில் இருக்கும் குழப்பங்கள் விலகும். எதையும் தைரியமாக எதிர்த்துப் போராடுவீர்கள். கடினமான பிரச்சனைகளையும் எதிர்த்துச் சமாளிப்பீர்கள். பொறுமையுடன் செயல்பட்டால், வெற்றி உண்டாகும். உடன்பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார வரவு இருந்தாலும், சிக்கனமாகச் செலவு செய்வது நல்லது. எந்த காரியத்திலும், நிதானமாகச் செயல்பட்டால் முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர்களிடத்தில் அதிக அக்கறை காண்பீர்கள் . ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்