Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.06.2023

Nandhinipriya Ganeshan Updated:
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.06.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 23 ஆம் நாளுக்கான [06 ஜூன் 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.06.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நண்பர்களின் தேவையை பூர்த்தி செய்து வைப்பீர்கள். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். வீட்டு பெரியவர்களால் ஆதாயம் கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.06.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். தள்ளிப்போன அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். மற்றவர்களிடம் பணம் கொடுக்கும்போது கவனம் தேவை. சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.06.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பணஉதவி தேடி வரும். கணவன்-மனைவி இடையே பாசம், அன்பு, அக்கறை அதிகரிக்கும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். எதிர்பாலினத்தவரால் நன்மை உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு சந்தோசத்தை தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயத்தில் வெற்றி கிடைக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 1

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.06.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

முடியும் என்றால் மட்டும் வாக்குறுதி கொடுக்கவும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். நண்பர்களால் அலைச்சல்களை சந்திப்பீர்கள். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை கூறும்போது கவனம் தேவை. வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை குறைத்துக்கொள்ளவும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். சகஊழியர்களிடம் அனுசரித்து நடந்துக் கொள்ளவும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

அதிர்ஷ்ட எண்: 6

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.06.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வீட்டு பெரியவர்களிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். பணப்புழக்கம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். அன்புக்குரியவர்களுக்கு பரிசு வாங்கிக் கொடுப்பீர்கள். எந்த செயலிலும் ஒரு உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். திடீர் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.06.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பணியிடத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் வாங்க வேண்டாம். சிலருக்கு தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தோடு இருப்பது நல்லது. நண்பர்களுடன் சண்டை ஏற்படும் நாள். பொறுமை முக்கியம். பொது பிரச்சனையில் ஒதுங்கி இருக்கவும். வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்ய வேண்டாம். துணையின் உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.06.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

நெருங்கிய நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு விஷயம் மகிழ்ச்சியை தரும். பணியிடத்தில் சாமர்த்தியமாக நடந்துக் கொண்டு பாராட்டை பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான நாள். பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.சிலருக்கு குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். துணையின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.06.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

மனதை உறுதிக் கொண்டிருந்த விஷயத்தில் தெளிவான தீர்வு கிடைக்கும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் அனாவசிய பேச்சை தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். புதிய நபர்களின் சந்திப்பு கிடைக்கும். வாழ்க்கை துணை விஷயத்தில் மற்றவர்களின் பேச்சை நம்பாமல் இருப்பது நல்லது. நீண்ட நாடகளாக இழுத்தடித்த ஒரு காரியம் நடந்து முடியும். கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நாள். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.06.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எதிர்கால எண்ணங்களால் குழப்பத்தோடே இருப்பீர்கள். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். காதல் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை உணர்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். இரவு நேர பிரயாணத்தை தவிர்க்கவும். சகோதர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். தொல்லை!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.06.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

சவால்கள் நிறைந்த நாள். பணியிடத்தில் சகஊழியர்களிடையே திறமையை நிரூபிக்க போட்டி போட்டு வேலை செய்வீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். தாய்வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும். பெரியவர்களின் பேச்சை கேட்டு நடந்து கொள்வது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களிடம் இருந்த வந்த பிரச்சனை நீங்கி, ஒற்றுமை மேம்படும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 4

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.06.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வரும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களிடம் உங்க குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். கனவுகள் நிறைவேறும் நாள். மனதில் தன்பிக்கை அதிகரிக்கும். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வெளியில் செல்ல வாய்ப்புண்டு. ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தனம் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 06.06.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பழைய பாக்கிகள் வசூலாகும். பணியிடத்தில் கொடுத்த பணியை சரியான நேரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். சிலருக்கு அரசியல் சார்ந்த நபர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கூர்மையான பொருட்களை கையாளும்போது நிதானம் தேவை. புதிய நபரால் குடும்பத்தில் சந்தோசமான தருணம் உருவாகும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்