Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேகத்தை விட விவேகத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..! | 07.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
வேகத்தை விட விவேகத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..! | 07.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 24 ஆம் நாளுக்கான [07 ஜூன்2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 11.15 – 12.00 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

வேகத்தை விட விவேகத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..! | 07.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

கலை சார்ந்த விஷயத்தில் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவீர்கள். இலக்கியம் சார்ந்த பணிகளில் அதிக ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார மேம்பாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால், அலைச்சல்கள் ஏற்படும். இருப்பினும், இதனால் அனுகூலம் உண்டாகலாம். மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் எதுவும் இல்லை. பொருளாதார வரவு இருந்தாலும், சிக்கனமாகச் செலவு செய்வது நல்லது. மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

வேகத்தை விட விவேகத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..! | 07.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

புதிய வீடு வாங்குவது தொடர்பான சிந்தனை ஏற்படும். பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனை மேலோங்கும். தான, தர்ம செயல்பாடுகளில் உங்களின் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகம் தொடர்பான எண்ணங்களில் அதிக ஆர்வமும், ஈடுபாடும் உண்டாகும். மன நிம்மதியுடன் காணப்படுவீர்கள். எதிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

வேகத்தை விட விவேகத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..! | 07.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

மனதில் நீங்கள் நினைத்த காரியங்கள் ஈடேற்றுவதில், அதிக அலைச்சல்கள் உண்டாகலாம். எதிலும் கோபமில்லாமல், நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகலாம். இதனால், சில மாற்றம் ஏற்படும். நவீன தொழில்நுட்ப கருவிகளால், விரயம் ஏற்படலாம். மேலும், சிறு தூரப் பணிகளில் கவனத்துடன் செயல்படுவது சிறப்பு. தந்தையிடம் உருவாகும் சிறு சிறு விவாதங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

வேகத்தை விட விவேகத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..! | 07.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை உண்டாக்கும். உத்தியோகப் பணிகளில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். மேலும், சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம், மாற்றங்கள் உண்டாகும். செயல்களில் நிதானமாக இருப்பது வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் மறையும். மன தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

வேகத்தை விட விவேகத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..! | 07.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களைத் தெரிந்து கொண்டு செயல்படுவீர்கள். புதிய வேலை தொடர்பான செயல்பாடுகளில் இருந்து வந்த தடைகள் விலகி விடும் நன்மைகள் உண்டாகும். தாமதமான காரியங்கள் விரைவில் முடிவடைந்து வெற்றியைத் தரும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களினால் வெற்றிகள் உண்டாகலாம். திடீர் வாய்ப்புகளால் நன்மை உண்டாகும். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

வேகத்தை விட விவேகத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..! | 07.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய பொருள்கள் வாங்குவது தொடர்பான ஆர்வம் அதிகரிக்கும். பொழுதுபோக்குத் தொடர்பான விஷயங்களில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த செயல்களில் அதிக கவனம் தேவை. செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்பட்டு, வெற்றி காண்பீர்கள். எதிலும், விவேகத்துடன் செயல்படுவது நன்மையைத் தரும். மனதில் தோன்றும் இனம்புரியாத சிந்தனைகளால், சஞ்சலம் உண்டாகலாம். இதனால், குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

வேகத்தை விட விவேகத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..! | 07.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

விவசாயம் சார்ந்த துறைகளில் உங்களின் ஈடுபாடு அதிகரிக்கும். கல்விப் பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகள், மாணவர்களின் மாற்றத்துக்கு காரணமாக அமஒயும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். நீர் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் விலகி தெளிவு பிறக்கும். தொல்லை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

வேகத்தை விட விவேகத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..! | 07.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

கடன் சார்ந்தவற்றில் இருந்த பிரச்சனைகள் விலகி விடும். அதிரடியான சில செயல்களால், வியாபாரத்தில் உள்ள போட்டிகளை வென்று முன்னிலையில் இருப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்த சிக்கல்கள் விலகி, நிம்மதியுடன் இருப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். மனதில் உண்டாகும் வித்தியாசமான எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். போட்டித் தேர்வர்களுக்கு இது சாதகமான சூழலாக அமையும். உடல் நலம் சார்ந்தவற்றில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

வேகத்தை விட விவேகத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..! | 07.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

இணையம் தொடர்பான பணிகளில் வெற்றி காண்பீர்கள். செய்கின்ற செயல்களில் அதீத கவனம் தேவை. மனதில் புதுவிதமான இலக்குகள் தோன்றும். அதை சாதிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெருந்தன்மையான பேச்சுக்களால், புதிய அறிமுகம் உண்டாகும். பொருளாதார வரவு மேம்படும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேலோங்கும். புதுவிதமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியமான நாளாக அமைகிறது. எதிலும் நிதானத்துடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டுவீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வேகத்தை விட விவேகத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..! | 07.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

மனதில் தோன்றும் புதுவிதமான சிந்தனைகளால், நன்மைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் சார்ந்து இருந்து வந்த பிரச்சனைகள் விலகி விடும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. இனம்புரியாத கனவுகளினால், அமைதியின்மை ஏற்படும். எனவே, தேவையற்ற விஷயங்களை ஆழ்ந்து சிந்திப்பதில் அதிக கவனம் தேவை. புதுவிதமான செயல் திட்டத்தை வகுத்து, அதன் வழி நடப்பீர்கள். கொள்கையை எடுத்துக் கொண்டு, அதன் படி நடந்து வெல்வீர்கள். பொருளாதார வரவு மேம்படும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

வேகத்தை விட விவேகத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..! | 07.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

அயல்நாடு தொடர்பான பொருள்கள் மீது அதிக ஈடுபாடு மற்றும் ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். மனதிற்குப் பிடித்தவற்றை வாங்கி மகிழ்வீர்கள். புதுவித பயணங்களால், மனதில் தெளிவு பிறக்கும். உடனிருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மேலும், உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதலும் அதிகமாகும். எதிர்பாராத சில செலவுகளினால், புதிய அனுபவம் உண்டாகலாம். மனதிற்கு நன்மை தரும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் விலகும். பிள்ளைகள் வழி நன்மைகள் உண்டாகும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வேகத்தை விட விவேகத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..! | 07.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

உடனிருப்பவர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் தோன்றும் புதுவிதமான தன்னம்பிக்கை வாழ்க்கையில் வெற்றியை உண்டாக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் மேலோங்கி செயல்படுவீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறைந்து பொருளாதார வரவு ஏற்படும். இருப்பினும், சிக்கனத்துடன் செலவு செய்வது நல்லது. எதிர்பார்த்த சில உதவிகளால், மாற்றங்கள் உண்டாகும். எந்த காரியம் செய்தாலும், மன தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுவது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தீர்க்க முடியாத பிரச்சனைகளும் விலகும் நேரமாக அமைகிறது. சோதனை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்