Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.. எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 12.08.2023

Nandhinipriya Ganeshan Updated:
வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.. எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 12.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 27 ஆம் நாளுக்கான [12 ஆகஸ்ட் 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.. எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 12.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பணவரவு ஓரளவு திருப்தி தரும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட முக்கிய காரியம் நல்லபடியாக நடந்து முடியும். சிலர் மனதிற்கு பிடித்த இடங்களுக்கு சென்று வருவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. பணியிடத்தில் உழைப்புக்கு உண்டான பாராட்டு கிடைக்கும். சகோதரர்களுக்காக சில விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வரும்.

வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.. எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 12.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

முக்கிய முடிவுகள் எடுக்கும்போது வாழ்க்கைத்துணையுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைப்பேசி வழியாக நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும். பணவரவு தேவையான அளவுக்கு இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.. எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 12.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

குடும்ப விஷயத்தில் உறவினர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் தேவைப்படும் நாள். சகோதரர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தேவையான அளவுக்குபணம் இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதில் கவனம் தேவை. பணியிடத்தில் உங்க பணியை நீங்களே முடிக்க முயற்சிப்பது நல்லது.

வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.. எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 12.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

திடீர் விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நினைத்த காரியம் நினைத்தப்படி நிறைவேறும். சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். செலவுகள் அதிகரித்து காணப்படும். ஆனாலும் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பாலினத்தவரால் ஆதாயம் உண்டு. மனைவியின் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.. எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 12.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் அவ்வப்போது சின்ன சின்ன குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தேவையில்லாத சிந்தனையால் முக்கிய வாய்ப்பு கைநழுவிப் போகும். நண்பர்களால் ஆதாயமும் உண்டு, அலைச்சலும் உண்டு. தந்தையின் உடன்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களிடம் எச்சரிக்கை வேண்டும். 

வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.. எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 12.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வீட்டில் சிறிய அளவில் சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் திறமையை நிரூபிக்க அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்ததை விட பணவரவு கூடுதலாக இருக்கும். வியாபாரம் அற்புதம். புதிய முயற்சிகள் பலன் தரும். மற்றவர்களுக்கு தேடிப்போய் உதவி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தாயாருடன் வீண்விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. 

வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.. எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 12.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. புதிய நபரால் கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும். சிலருக்கு சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பணியிடத்தில் சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மைகள் நிறைந்த நாள்.

வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.. எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 12.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மேலதிகாரிகளால் உங்கள் திறமை பாராட்டப்படும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.. எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 12.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாகனப் பயணத்தின்போது கவனமாக செல்லவும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். இழுபறியாக இருந்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரிகளுக்கு தேவையான கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டு. வாழ்க்கைத்துணை பிடிவாதமாக நடந்து கொண்டாலும் அனுசரித்து செல்வது நல்லது. 

வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.. எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 12.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தாய்வழி உறவினர்களுக்குக் கடனாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். பணியிடத்தில் பணிச்சுமை இருந்தாலும் எளிதில் முடித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும் நாள். தடைப்பட்ட சுபகாரியங்கள் நல்லபடியாக நடைபெறும். பிரபலமானவர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாகும் சந்தர்ப்பம் ஏற்படும்.

வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.. எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 12.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பிள்ளைகள் பெற்றோரிடத்தில் அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். உங்கள் தேவை அறிந்து நண்பர்கள் உதவி செய்வார்கள். பணியிடத்தில் சகஊழியர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எது பேசுவதாக இருந்தாலும் வார்த்தையில் பொறுமை தேவை. திடீர் பிராயணங்கள் அலைச்சலை ஏற்படும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.

வியாபாரத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.. எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 12.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

நண்பர்களுடன் இருந்துவந்த பிரச்சனை முடிவுக்கு வரும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணப்புழக்கம் இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எப்போதும் இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறும். கடன்களால் ஏற்பட்ட பிரச்சனை சுமூகமாக முடியும். தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் வீண்விவாதம் செய்வதை தவிர்க்கவும். பிடித்த நபரை சந்திப்பீர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்