Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினர் வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 11.08.2023

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினர் வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 11.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 26 ஆம் நாளுக்கான [11 ஆகஸ்ட் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

இந்த ராசியினர் வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 11.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பணவரவுக்கு குறைவிருக்காது. சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. பணியிடச்சூழல் சாதகமாக இருக்கும். விற்பனை எப்பவும் போலவே இருக்கும். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.

இந்த ராசியினர் வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 11.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பணியிடத்தில் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். புதிய நபர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். விற்பனை அமோகமாக இருக்கும். பிறந்த வீட்டில் இருந்து எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

இந்த ராசியினர் வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 11.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணியிடத்தில் மேல்அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். காதலியின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள்.

இந்த ராசியினர் வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 11.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

விலகி சென்ற உறவினர் உங்களை புரிந்து தேடி வருவார்கள். அக்கம்பக்கத்தினரால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். திடீர் செலவுகள் கவலையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். தொலைத்தூர பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கவும். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

இந்த ராசியினர் வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 11.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். செலவுகள் அதிகரித்தாலும் போதிய பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். எதிர்பாலினத்தவரால் ஆதாயம் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் அவசியம். சகோதரர்களால் அலைச்சல் ஏற்பட்டு நீங்கும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. 

இந்த ராசியினர் வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 11.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

விற்பனையை அதிகரிக்க சற்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். புதிய நபர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சூழ்நிலை ஏற்படும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள். நீண்ட நாள் சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாய்மாமன் வழியில் நன்மை ஏற்படும். புதிய முயற்சிக்கு வாழ்க்கை துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

இந்த ராசியினர் வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 11.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

வங்கி விஷயங்களில் எச்சரிக்கையோடு இருக்கவும். பணவரவு திருப்திதருவதாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். விலையுயர்ந்த பொருட்களின் மீது அதிக கவனம் தேவைப்படும் நாள். எதிர்பாலினத்தவரால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். வழக்குகளில் பொறுமை அவசியம். தந்தையுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமையாக இருப்பது நல்லது.

இந்த ராசியினர் வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 11.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது. நண்பர்களிடம் பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒருவருக்கு திடீர் மருத்துவ செலவு ஏற்படும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்த்துவிடவும். மேலதிகாரியின் செயல் எரிச்சலை ஏற்படுத்தும். நிதானம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. முக்கிய முடிவு எடுப்பதை தவிர்க்கவும்.

இந்த ராசியினர் வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 11.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

அதிகாரிகள் கண்டிப்பு காட்டுவார்கள். சிலருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளுடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. சகபணியாளர்களை அனுசரித்து நடந்துக் கொள்ளவும். கைக்கு வரவேண்டிய பணம் இழுத்தடிக்கும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும். முடிந்தவரை மௌனமாக இருப்பது நல்லது.

இந்த ராசியினர் வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 11.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உழைப்புக்கு ஏற்ற பரிசும், பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி அன்பு மிகும். திடீர் பணவரவுக்கு சாத்தியமுண்டு. காதலர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள். நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. 

இந்த ராசியினர் வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 11.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பிறர் அவதூறாகப் பேசினாலும் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை வேண்டும். கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வீண் செலவுகளை தவிர்க்கவும். சக வியாபாரிகளால் இடையூறுகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணியிடத்தில் உங்கள் பணிகளை மட்டும் செய்வது நல்லது.

இந்த ராசியினர் வாயை திறந்தாலே அது பிரச்சனையில் தான் முடியும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 11.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி குதூகலம் குடிக்கொள்ளும். பிள்ளைகள் சொல் கேட்டு நடப்பார்கள். சகோதரர் கேட்ட உதவியை செய்து தருவார். தொழிலுக்கு எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். இருப்பினும், தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்