Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிலரின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 23.08.2023

Priyanka Hochumin Updated:
சிலரின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 23.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 06 ஆம் நாளுக்கான [23 ஆகஸ்ட்  2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை:  04.45 – 05.45 மணி வரை

சிலரின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 23.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

போட்டி விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஒப்பந்த பணியில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை தெரிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும்.

சிலரின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 23.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சலுகையால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்து நடப்பது நல்லது. புதிய கனவுகள் தோன்றும். நீண்ட நாள் பிராத்தனை நிறைவேறும். குழந்தையின் படிப்பு விஷயத்தில் அக்கறை மேம்படும்.  

சிலரின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 23.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். செய்ய வேண்டிய விஷயங்களுக்கு அலைச்சல் ஏற்படும். தாயாருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபத்தை அதிகரிக்கும். இழுபறியான வேலைகள் நிறைவேறும். தேவைகளை நிறைவேற்றும் சூழல் அமையும்.     

சிலரின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 23.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

சிறு தூரப் பயணங்கள் மனதில் சில மாற்றத்தை ஏற்படுத்தும். அக்கம் - பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். திட்டமிட்ட விஷயங்கள் நிறைவேறும். வியாபாரப் போட்டிகளை வெற்றி காண்பீர்கள். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.

சிலரின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 23.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் முதலீடு அதிகரிக்கும். வேலை சார்ந்த புதிய வாய்ப்புகள் வரும். மனதளவில் இருந்து வந்த வருத்தம் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.      

சிலரின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 23.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வியாபார பணியில் அலைச்சல் அதிகரிக்கும். கால் வலி வந்து போகும். விமர்சனங்களால் கவலை ஏற்படும். உத்தியோக பணியில் பொறுப்பு அதிகமாகும். தேவையற்ற பேச்சை குறைப்பது நல்லது. விவேகத்துடன் செயல்பட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.

சிலரின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 23.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எதிலும் ஆர்வமின்மை உண்டாகும். வாகனப் பயணத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் ஏற்றம் இறக்கம் ஏற்படும். நபர்களைப் பற்றிய புரிதல் அதிகமாகும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். சில  முக்கிய பணியால் அலைச்சல் உண்டாகும்.

சிலரின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 23.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

திடீர் சந்திப்பால் ஆதாயம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணியில் முக்கியத்துவம் மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அதனால் சேமிக்கும் வாய்ப்பு உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிலரின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 23.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வேலையாட்களிடம் சாமர்த்தியமாக வேலை வாங்கவும். அனுபவ அறிவு சில பிரச்சனைகளுக்கு தீர்வாகும். அலுவலக வேளையில் கடமையுடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனையில் தெளிவு ஏற்படும்.

சிலரின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 23.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தடங்களான வேலைகள் நிறைவு பெரும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டி குறையும். உறவினர்களின் வருகை ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும்.

சிலரின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 23.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உடல்நிலையில் ஏற்றம், இறக்கம் உண்டாகும். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் உண்டாகும். நிதானத்துடன் எந்த செயலையும் செய்யவும். மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் செயல்படுவது நல்லது. வியாபார பணியில் பொறுமை வேண்டும். நெருக்கடியான சூழலை எளிமையாக சமாளிப்பீர்கள்.

சிலரின் சந்திப்பால் மாற்றம் ஏற்படும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 23.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவரால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் சாதகமாகும். வியாபாரத்தில் முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் குறையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்