Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 14.08.2023

Nandhinipriya Ganeshan Updated:
வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 14.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 29 ஆம் நாளுக்கான [14 ஆகஸ்ட் 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 14.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். கடன் வாங்க வேண்டாம். நண்பர்களுடன் சண்டை ஏற்படும் நாள். பொறுமை முக்கியம். பொது பிரச்சனையில் ஒதுங்கி இருக்கவும். வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்ய வேண்டாம். துணையின் உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். கணவன், மனைவி எதார்த்தமாக பேசிக்கொள்வதை தவிர்க்கவும்.

வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 14.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டு பெரியவர்களிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். மேலதிகாரியிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும்.

வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 14.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தில் புதிய நபரால் மகிழ்ச்சி சூழல் உண்டாகும். இக்கட்டான சூழ்நிலையில் சகஊழியர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாலினத்தவரால் ஆதாயம் உண்டு. பணியிடத்தில் சாமர்த்தியமாக நடந்துக் கொண்டு பாராட்டை பெறுவீர்கள். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சிலருக்கு குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையும்.

வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 14.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். சகபணியாளர்களின் செயல் கோபத்தை ஏற்படுத்தலாம். எது பேசினாலும் வார்த்தையில் கவனம் வேண்டும். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். பிள்ளைகள் தந்தையிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். நண்பர்களால் அலைச்சல் ஏற்படும்.

வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 14.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாள் மனதில் இருந்த குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும். எதிரிகள் நண்பர்களாகலாம். புதிய முயற்சிகளில் துணிந்து இறங்குவீர்கள். மற்றவர்களிடம் பணம் கொடுக்கும்போது கவனம் தேவை. எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.

வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 14.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பூர்வீக சொத்து விற்பனை தொடர்பாக காரியங்கள் சாதகப் பலனை தரும். நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்ப்பது நல்லது. பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.  காதல் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை உணர்வீர்கள். இரவு நேர பிரயாணத்தை தவிர்க்கவும். சகோதர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத செலவுகள் கவலையை உண்டாக்கும்.

வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 14.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

அனைவரிடமும் நேர்மையாக நடந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும் நாள். உறவினர்களிடையே இருந்துவந்த பிரச்சனை நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தை தரும். வாழ்க்கை துணை விஷயத்தில் மற்றவர்களின் பேச்சை நம்பாமல் இருப்பது நல்லது. நீண்ட நாடகளாக இழுத்தடித்த ஒரு காரியம் நடந்து முடியும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நாள்.

வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 14.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். கடின உழைப்பிற்கு உண்டான பரிசு கிடைக்கும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் ஏற்படும் சவால்களை ஈஸியாக சமாளித்து மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். நீர்நிலை சார்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம். 

வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 14.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் சிறப்பு. நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பழைய நண்பர்களின் சந்திப்பு சந்தோசத்தை தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயத்தில் வெற்றி கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதர வாக இருப்பார்கள். எவ்வளவுதான் பக்குவமாக நடந்தாலும் பணத்தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவீர்கள். காதலியோடு இருந்த கருத்து வேறுபாடு விலகும்.

வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 14.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

முடியும் என்றால் மட்டும் வாக்குறுதி கொடுக்கவும். வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும். பணப்புழக்கம் சுமாராக தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். நண்பர்களால் அலைச்சல்களை சந்திப்பீர்கள். ஃபோன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு.

வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 14.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

எதிர்பாராத அலைச்சல்கள் சோர்வை ஏற்படுத்தும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாக புதுப்பிரச்சனை தலைதூக்கும். முடிந்த வரை வாயை திறக்காமல் இருப்பது சிறப்பு. வியாபாரத்தில் இருந்துவந்த தடை தாமதம் விலகும். துணையின் முழுமையான கவனிப்பு கிட்டும். தந்தையிடம் அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள்.

வாழ்க்கை துணையுடன் அகந்தை பேச்சை தவிர்த்துக் கொள்ளவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 14.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

சவால்கள் நிறைந்த நாள். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். பெரியவர்களின் பேச்சை கேட்டு நடந்து கொள்வது நல்லது. நண்பர்களிடம் இருந்த வந்த பிரச்சனை நீங்கி, ஒற்றுமை மேம்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்