Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.08.2023

Nandhinipriya Ganeshan Updated:
தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 01 ஆம் நாளுக்கான [18 ஆகஸ்ட் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்சனை ஏற்படும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். போராட்டமான நாள். எதிர்பாராத செலவு நெருக்கடியை உண்டாக்கும்.

தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் நீங்கி சுமுகமான சூழ்நிலை ஏற்படும். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். செல்போன் மூலம் இன்பச்செய்தி கிடைக்கும்.

தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு.

தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். கணவன், மனைவி இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்களை முடிப்பீர்கள்.

தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். தந்தைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நினைத்தது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். சிந்தித்து செயல்படவும்.

தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து நடந்துக் கொள்ளவும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. 

தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். மற்றவர்களுக்குக் கொடுத்து வராமல் இருந்த கடன்  திரும்பக் கிடைக்கக்கூடும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். 

தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தடைகள் குறையும் நாள்.

தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். திடீர் விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் நிலவும். பணியிடத்தில் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்  இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்