Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 19.08.2023

Nandhinipriya Ganeshan Updated:
தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 19.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 02 ஆம் நாளுக்கான [19 ஆகஸ்ட் 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 10.45 - 11.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 19.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். எல்லா பணிகளையும் குறித்த நேரத்தில் செய்து முடித்து, மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். திடீர் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் தனவரவு உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள், ஆனால் லாபம் சுமாராக தான் இருக்கும். தம்பதிக்குள் அன்பு, அக்கறை அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது பொறுமை வேண்டும். எதிர்பாலினத்தவரின் அறிமுகம் கிடைக்கும்.

தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 19.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பூர்வீக சொத்தால் சில பிரச்சனைகளை சந்தீப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் நடக்கும். எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க முடியாது. சுபகாரியம் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் கோபமாக நடந்துக்கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை உண்டாக்கலாம். 

தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 19.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

குடும்பத்தின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். மணல், செங்கல் வியாபாரம் செய்பவர்களுக்கு கொள்ளை லாபம். சொந்தபந்தங்களுடன் வியாபாரம் செய்பவர்கள் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் நன்றாகவே இருக்கிறது. நீண்ட நாள் கழித்து நெருக்கமானவரை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ஆசைப்பட்ட பொருள் வாங்குவீர்கள்.

தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 19.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டிய நாள். வாழ்க்கை துணை பற்றிய சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். லாபம் இரட்டிப்பாகும். சிலருக்கு வியாபாரம் சம்பந்தமான பயணங்கள் அனுகூலப் பலன்களை தரும். கடன் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடனும் கவனத்துடனும் செயல்படவும். எதிர்பாராத பணவருகை பல நிதி சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்கும். 

தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 19.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

தன்நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் கடின உழைப்புக்கு தகுந்து அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம் ஏற்படும். புதிய முயற்சிகள் அதிர்ஷ்ட பலன்களை தேடி தரும். உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். துணையின் விருப்பத்தை நிறைவேற்ற கொஞ்சம் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். சிலருக்கு வீடு, நிலம் வாங்கும் யோகமும் உண்டு. விலங்குகளிடம் இருந்து ஒதுங்கி இருக்கவும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களின் வருகையால் லாபம் ஏற்படும். 

தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 19.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். தூரத்து சொந்தம் வழியாக நல்ல செய்தி காதுக்கு வரும். திருமண வாழ்க்கையை பொறுத்த வரையில், மனைவியின் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது உத்தமம். பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். புதிய முயற்சி சாதகப் பலனை தரும்.

தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 19.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சிலர் நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். புதிய தொழில் தொடங்க நல்ல நாள். பெண்களால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்களின் போது பணம் பத்திரம். பங்குச்சந்தை நல்ல பலனை கொடுக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது உத்தமம். பணவரவு திருப்திகரமானதாக இருக்கும். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். பணியிடத்தில் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 19.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்த விவகாரம் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் அடுத்தவரின் பேச்சை கேட்பதை தவிர்க்க வேண்டும். சிலர் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட இடத்திற்கு சென்றுவருவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். துணையால் அனுகூலப் பலன் உண்டு. அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சுமாராக இருந்த தொழிலில் திடீர் லாபம் அதிகரிக்கும். 

தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 19.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அலைச்சல் ஏற்படும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு சகஊழியர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உற்பத்தி தொடர்பான துறைகளில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாகவே உள்ளது. காதலர்களுக்கு இடையில் இருந்த சண்டை முடிவுக்கு வரும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும்.

தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 19.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பணியிடச்சூழழ் சிறப்பாக இருக்கும். சண்டையால் பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள், எந்த காரியத்தையும் வழக்கத்தைவிட மிக விரைவாக செய்து முடிப்பீர்கள். துணையின் மனதை புரிந்துக் கொண்டு அவர்களின் விருப்பதை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் ஏற்றம் இரக்கமின்றி சீராக இருக்கும். காதல் வாழ்க்கையில் ஒரு சூப்பரான திருப்பத்தை காண்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். உங்களின் மீதே உங்களுக்கு புது நம்பிக்கை பிறக்கும்.

தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 19.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

அனைவரிடமும் அனுசரித்து போவது நல்லது. தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்த்துவிடுங்கள். கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான். அரசு சார்ந்த துறையில் பணிபுரிவோர்களுக்கு பொறுப்பும், அதிகாரமும் அதிகரிக்கும். துணையுடன் பேசும்போது கடுமையான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பணஇழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பணத்தை கவனமாக கையாளுங்கள். எந்த முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள். வாக்குறுதி கொடுக்கும்போது சிந்தித்து செயல்படுங்கள். 

தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கு தான்.. | Tomorrow Rasi Palan in Tamil | 19.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். கடின உழைப்பிற்கு தக்க பரிசு காத்திருக்கிறது. கால்நடை சம்பந்தமான தொழிலில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் பல நாட்களாக இருந்த வந்த பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். குறைந்த முயற்சியில் பெரிய வெற்றியை அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பேச்சு சகபணியாளர்களுக்கு மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பு.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்