மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 26 ஆம் நாளுக்கான [12 செப்டம்பர் 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 07.45 - 08.45 மணி வரை
மாலை: 04.45 - 05.45 மணி வரை
எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். மனதில் புதிய சிந்தனை உருவாகும். உத்தியோக பணியில் பொறுப்பு அதிகரிக்கும். கேளி கிண்டலான சூழ்நிலையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.
நெருக்கமானவர்கள் பற்றி புரிதல் ஏற்படும். வியாபார பணியில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். செயல்பாடுகளில் இருந்து வந்த மந்தத்தன்மை குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். லேட்டஸ்ட் டெக்னாலஜி கருவி மீது ஈடுபாடு அதிகரிக்கும்.
நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் கருத்துக்கு மதிப்பு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பழக்கவழக்கத்தில் மாற்றம் ஏற்படும். தற்பெருமை சிந்தனையை குறைத்துக்கொள்வது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் பழைய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். தொழில் ரீதியாக முதலீடுகளில் கவனமாக இருக்கவும். யோசிக்காமல் வாக்குறுதி அளிப்பதைத் தவிர்க்கவும். பத்திரம் விஷயத்தில் சிந்தித்துச் செயல்படவும்.
வியாபாரத்தை விரிவடைய எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சல் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகள் அதிகமாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோக பணியில் சூழ்நிலை மாற்றம் உண்டாகும்.
உத்தியோக பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வர்த்தகம் தொடர்பான பணியில் முதலீடு அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும்.
நெருக்கமானவர்கள் பற்றி புரிதல் ஏற்படும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகரிகளிடத்தில் சிந்தித்துச் செயல்படவும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாமதமான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். கவலை நீங்கி மகிழ்ச்சியான சூழல் அமையும். இணைய பணியில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.
சகோதரர் வழியில் ஒற்றுமை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மேம்படும். சொத்து பிரச்சனைகள் சாதகமாகும். உத்தியோக பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
அரசுப் பணியில் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். பயணம் சார்ந்த விஷயத்தில் மாற்றம் ஏற்படும். மனதில் நினைத்தும் கருத்தை சிந்தித்து செயல்படவும்.
தந்தை வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். மனதில் புதிய தேடல் பிறக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். புதிய அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணம் வந்து போகும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விலகிச் சென்றவர்கள் திரும்பி வருவார்கள். வாகன பழுதை சீர் செய்யும் சூழல் அமையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும்.
கற்பனை உணர்வால் எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனை உண்டாகும். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். வாசனை திரவியங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…