Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.07.2023

Nandhinipriya Ganeshan Updated:
மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 13 ஆம் நாளுக்கான [29 ஜூலை 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளுடன் சின்ன சலசலப்பு ஏற்படும். வார்த்தையில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவரின் அனுசரித்து நடத்து கொள்ளவும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் அனுபவமிகுந்தவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். 

மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு சிறப்பான நாள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சுபகாரியம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடி வரும். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். 

மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

அனுகூலப் பலன்களை அனுபவிக்க எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். வார்த்தையில் கவனம் தேவைப்படும் நாள். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். அனாவசிய செலவுகள் அதிகமாக இருக்கும். 

மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

புதிய முயற்சிகளில் ஆரம்பத்தில் சில தடைகளை சந்திப்பீர்கள். இருப்பினும், வெற்றி உறுதி. விருப்பங்கள் நிறைவேறும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுபகாரியங்களில் இருந்து வந்த அலைச்சல்கள் குறையும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகமும் உண்டு. பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். 

மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

மனதில் புதுவிதமான தெம்பும், தைரியமும் பிறக்கும். நிர்வாகம் சார்ந்த புதிய முடிவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். துணையுடன் விளையாட்டான பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். பயணங்களின் போது பணத்தை கையாளுவதில் கவனம் தேவை. கண்கள் சம்பந்தமான பிரச்சனை வாய்ப்புள்ளது.

மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

கண்டதையும் நினைத்து கொண்டு முக்கியமான காரியங்களில் கோட்டைவிட்டு விட வேண்டாம். பணியிடத்தில் நற்பெயர் சம்பாதிக்க கடினமான உழைக்க வேண்டியிருக்கும். தாராளமான தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் பெரியவர்களின் உதவி கிடைக்கும். 

மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். பணியிடத்தில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். இதனால், சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் கவனமாகப் பழகுவது நல்லது. வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டம் அடிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.

மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்வது சிறந்தது. விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். இதன் மூலம் உங்க திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்யலாம். எதிர்காலம் தொடர்பான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த புதிய யுக்திகளை கையாளுவீர்கள். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள். 

மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு, அரவணைப்பும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாகவே உள்ளது. சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். 

மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

அதிக சிந்தனை உங்கள் மகிழ்ச்சியை பாதிக்கும். பணியிடத்தில் பனிச்சுமை காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை முக்கியம். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்க்கவும்.

மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

சிந்தனையின் போக்கில் உங்களிடம் உறுதியும் உத்வேகமும் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் சகஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். நிதிநிலைமை அற்புதமாக இருக்கும். துணையிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். 

மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 29.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

சுமாரான நாளாக தான் இருக்கும். எனவே, அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். அனைவரிடம் சகஜமான அணுகுமுறை வேண்டும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை தரலாம். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். வீண் செலவுகள் அதிகரித்து காணப்படும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்