Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம்.. நிதானம் அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.07.2023

Nandhinipriya Ganeshan Updated:
பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம்.. நிதானம் அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 09 ஆம் நாளுக்கான [25 ஜூலை 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம்.. நிதானம் அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

வேலை செய்யும் இடத்தில் நிறைய போட்டி இருக்கும். ஆனால், அதையெல்லாம் சாமாளிச்சி பாராட்டு பெறுவீர்கள். கடன உழைப்பு தேவை. வாழ்க்கையில் நன்மை தீமையை அறிந்துக் கொள்ளும் நாள் இன்று. நீங்க உங்க கணவன் அல்லது மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். இதனால் உறவில் அன்பு அதிகரிக்கும். பணவரவு உண்டு. ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம்.. நிதானம் அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உங்க பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம். அதனால், எதிலும் அவரசம் காட்டாமல், நம்பிக்கையோடு கையாளுவது நல்லது. இல்லையென்றால் வீண் விவாதங்கள் வந்து நிற்கும். வேலை செய்யும் இடத்தில் வேலை அதிகமாக இருக்கும். உங்க துணையிடம் கேலியாக பேசுவதை தவிர்க்கவும். பண வரவு சற்று குறைவாக தான் இருக்கும். அனாவசிய செலவை குறைக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சினம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம்.. நிதானம் அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

புதிய வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இவ்வளவு நாட்களாக எதற்கு ஆசைப்பட்டீர்களோ, அதை அடைய வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பொறுமை தேவை. தேர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம்.. நிதானம் அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டிய நாள். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை இருக்கும். உங்க துணையுடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள். இதனால், விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகள் வரும். பணவரவு விஷயத்தில் சற்று மந்தமாக தான் இருக்கும். தூக்கமின்மையும், தோல் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம்.. நிதானம் அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இவ்வளவு நாட்களாக இருந்த வந்த கடன் பிரச்சனைகள் குறையும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை ஏற்படுத்தும். எதிர்பாரா உதவிகள் தேடி வரும். பணவரவு தராமாக இருக்கும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. கண் சம்பந்தமான பிரச்சனை இருந்தால் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம்.. நிதானம் அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

கடினமான வேலையை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பொறாமை குணத்தால் மனதில் நிம்மதி இருக்காது. நெருங்கிய நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய நாள். திருமணமானவர்கள் தேவையில்லாத காரணத்தால் சில சலசலப்பு ஏற்படும். செலவுகள் செய்வதில் அதிக கவனம் தேவை. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம்.. நிதானம் அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

சில விஷயங்கள் கசப்பான தருணத்தை உருவாக்கலாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வருமானம் சிறப்பாகவே உள்ளது. எதிர்பாரா பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறருடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வேலை செய்யும் இடத்தில் தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்த வரையில், செரிமானம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம்.. நிதானம் அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

சுறுசுறுப்பாக இருப்பீர்கள், எந்த காரியத்தையும் வழக்கத்தைவிட மிக விரைவாக செய்து முடிப்பீர்கள். உங்க பேரக் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உங்க துணையுடன் பணம் சம்பந்தமான பிரச்சனைகளால் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் ஒரு சூப்பரான திருப்பத்தை காண்பீர்கள். இதுவரை கடுகடுவென்று நடந்துக்கொண்ட உங்க பாஸ் இன்று கூலாக நடந்துக் கொள்வார். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம்.. நிதானம் அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பணிச்சுமையால் செம சோர்வில் இருந்தவர்களுக்கு கொஞ்சம் ஃபிரீ டைம் கிடைக்கும். நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசும்போது சற்று கவனத்தோடு பேசுங்கள். இல்லையெனில் அதுவே நட்பை முறித்துவிடும். உங்களுடைய துணைக்கு உங்களின் மீது காதல், பாசம் அதிகரிக்கும். உங்களுடைய வார்த்தைக்கு உறவினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழிலில் லாபம் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 3

பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம்.. நிதானம் அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பல சவால்களை சந்திக்க தயாராக இருந்துக் கொள்ளுங்கள். கவனக்குறைவு காரணமாக பணியில் சின்ன சின்ன தவறுகள் ஏற்படலாம். அன்புக்குரியவரின் நடத்தையில் சந்தேகப் படாதீர்கள். அவரின் வார்த்தைகளை உன்னிப்பாக கேட்டு எதையும் பேச வேண்டும். வீண் செலவுகள் வரும், பணத்தை சேமிக்க வேண்டியது அவசியம். ஓய்வு என்பதே கிடைக்காது. அதுவே வெறுப்பை உண்டாகும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம்.. நிதானம் அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பெரிய வள்ளல் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவிடாதீர்கள், அப்பறம் அவஸ்தை பட வேண்டிருக்கும். அனாவசிய பேச்சை குறைத்து கொள்வது நல்லது. தாய்மாமன் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு. வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். மேலதிகாரிகள் உங்களின் பணித்திறனை பார்த்து பாராட்டுவார்கள். உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அநாவசியமாக தெரியாதவர்களிடன் பேச வேண்டாம். சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை வரலாம்.. நிதானம் அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 25.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

உடன் பணிபுரிபவர்களின் உதவி கிட்டும். கோபத்தால் சின்ன விஷயத்தை பெரியதாக்குவீர்கள் - அது குடும்பத்தினரை அப்செட் ஆக்கும். நிதி நிலைமை சிறப்பாக உள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். துணையுடன் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். சில நல்ல காரியங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். வங்கி சம்பந்தமான விஷயங்களில் மட்டும் சற்று எச்சரிக்கையோடு இருக்கவும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்