Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.07.2023

Nandhinipriya Ganeshan Updated:
வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 11 ஆம் நாளுக்கான [27 ஜூலை 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 10.45 - 11.45 வரை

மாலை: இல்லை

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

அதிர்ஷ்டமான நாள். புதிய முயற்சிகளில் துணிந்து இறங்குவீர்கள். வெறுத்து ஒதுக்கிய நபர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள். பணியிடச்சூழல் அற்புதமாக இருக்கும். சில விஷயங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்பு விலகும். இழுபறியான பணம் வசூலாகும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். நெருங்கிய சொந்தபந்தங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள். பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொள்வது நல்லது. வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டாம். 

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை மேம்படும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது. பணவரவு சுமாராக தான் இருக்கும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். 

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

அண்டை வீட்டாரால் வீண் விவாதம் வெடிக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். பிடித்த பொருள் தொலைந்துப் போகலாம். கடன் பிரச்சனையால் நாள் முழுக்க கவலையாக இருப்பீர்கள். அதிக பணிச்சுமை காரணமாக சோர்வாக உணர்வீர்கள். வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். 

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். இழுபறியாக இருந்த தனவரவு வந்து சேரும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். மனைவியிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பணியிடத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரனையான பேச்சு அவசியம். காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது பிரிவினையை தடுக்கும். எதிர்பாராத பயணங்கள் மூலம் அலைச்சல் ஏற்படும். புதிய முயற்சிகள் தடைபடும் என்பதால் முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது. குடும்பத்தினரிடம் எது பேசினாலும் வார்த்தையில் கவனம் வேண்டும்.  

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். துணையின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும். தாய்வழி உறவினர்களால் நல்ல செய்து வந்து சேரும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு செல்ல வாய்ப்பு அமையும். சிலருக்கு புதிய நபர்களால் மாற்றங்கள் ஏற்படும். 

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். தொழில் சற்று மந்தமாக காணப்படும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். எந்த காரியத்திலும் பக்குவமாகவும் புத்திசாலித்தனத்துடனும் சூழ்நிலைகளை கையாள வேண்டும். பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம். கண் சார்ந்த பிரச்சனை வரலாம். தொலைதூர பயணத்தை தவிர்க்கவும். சிலருக்கு பழைய நண்பர்களிடம் இருந்து நற்செய்தி கிடைக்கும். 

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும். எதிர்பாராமல் செய்த உதவியால் சமுதாயத்தில் மதிப்பு உயரும். நீண்ட நாள் பிரச்சனைக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் பனிச்சுமை அதிகரித்து காணப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

எதிர்கால எண்ணங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் எதிர்பாராமல் நடந்த தவறால் மேலதிகாரியின் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். யாரிடம் பேசும் போதும் பேச்சில் பொறுமையும், நிதானமும் வேண்டும். பயணங்களின் போது விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம். தம்பதிகள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

வரவு செலவு இரண்டும் இருக்கும், சாதுர்யமாக செயல்பட்டு சமாளிப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு உண்டு. சிலருக்கு நவீன உபகரணங்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் புதிய நபரால் மகிழ்ச்சி சூழல் உண்டாகும். வியாபார பணியில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். திடீர் பிரயாணங்கள் ஏற்படும். சகோதரர்களால் அலைச்சல் ஏற்படும்.

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வியாபாரத்தில் லாபம் சிறப்பாகவே இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலர் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியப் பிரச்சனை நீங்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குளிர்ச்சியான உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்