Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.07.2023

Nandhinipriya Ganeshan Updated:
சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 07 ஆம் நாளுக்கான [23 ஜூலை 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 03.15 - 04.15 வரை

சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

எந்த செயலையும் செய்வதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். அதேபோல், மற்றவர்களிடம் உரையாடும் போதும் வார்த்தைகளில் கவனம் தேவை. பணியிடத்தில் சில தடைகளும் ஏமாற்றங்களும் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். நண்பர்களால் அலைச்சல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டு. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உத்தியோகத்தில் ஆசைபட்ட பொறுப்பை அடைவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். இருப்பினும், மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் வழியில் உதவி தேடி வரும். சுயதொழில் செய்வோருக்கு லாபம் எப்பவும் போல இருக்கும். துணையுடன் அகந்தை பேச்சை குறைத்துக்கொள்ளவும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

அனுகூலமான நாள். வியாபாரத்தில் லாபம் இரட்டிபாகும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணியிடத்தில் பட்ட கஷ்டத்திற்கு பரிசும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகளுக்கு வாய்ப்புள்ளது. அனைவரிடமும் சுமூகமாகப் பழகுவது நல்லது. சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு ஏற்படும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். பணியிடத்தில் பணிச்சுமை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் தவறுகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். துணையிடம் கோபமாக நடந்துக் கொள்ள வேண்டாம். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வேண்டுமென்றே சிலர் உங்களை வம்பிற்கு இழுப்பார்கள். சுதாரித்திக்கொண்டு சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகையால் சாதகமான சூழல் ஏற்படும். பணியிடத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். எந்தவொரு செயல்பாட்டிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படுங்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 3

சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படாது. கவனக்குறைவு காரணமாக தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. துணையுடன் கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதங்கள் வரலாம். வியாபாரத்தில் லாபம் எப்பவும் போலவே இருக்கும். வாகன பயணத்தின் போது நிதானம் அவசியம். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் அறிமுகம் கிடைக்கலாம். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

சுமாரான நாள். இருந்தாலும், நம்பிக்கை இழக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும். சுபகாரியம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம். நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்க்கவும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகப் பலன் கிடைக்கும். எதிர்காலம் சம்பந்தமான சிந்தனையால் பணியிடத்தில் சோர்வாக உணர்வீர்கள். மற்றவர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். புதிய நபரால் தம்பதிக்குள் பிரச்சனை வரலாம் அனுசரித்து செல்வது நல்லது. விலையுயர்ந்த பொருட்களின் மீது அதிக கவனம் தேவைப்படும் நாள். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பொறுமையின் சிகரமாக இருந்தால், வீண் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். பணியிடத்தில் சாதகமான சூழல் ஏற்படாது, கனிவான பேச்சு அவசியம் துணையுடன் வாக்குவாதம் ஏற்படும். நீங்க அனுசரித்து போவது உத்தமம். தாய்வழி பந்தங்களால் எதிர்பாராத செலவுகள் வரும். வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். கடன் பிரச்சனை மனஉலைச்சலை அதிகரிக்கும். பொது இடங்களில் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். துயரம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

அதிர்ஷ்டமான நாள். கடினமான பணிகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். நெருக்கமானவர்களிடம் சின்ன சின்ன கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். ஆசைப்பட்ட பொருள் வாங்குவீர்கள். சலனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 23.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வம்புக்கு வருபவரிடம் விட்டுக்கொடுத்து போவது சிறந்தது. பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சகபணியாளர்களின் ஆதரவை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும் நாள். ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. கூர்மையான ஆயுதங்களை கையாலும் போது மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்