Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேவையில்லாத பேச்சால் இந்த ராசியினருக்கு நட்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 30.08.2023

Priyanka Hochumin Updated:
 தேவையில்லாத பேச்சால் இந்த ராசியினருக்கு நட்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 30.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 13 ஆம் நாளுக்கான [30 ஆகஸ்ட்  2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை:  04.45 – 05.45 மணி வரை

 தேவையில்லாத பேச்சால் இந்த ராசியினருக்கு நட்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 30.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உத்தியோகத்தில் இருக்கும் சில முக்கிய நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். கடன் குறைய ஆலோசனை கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் மூலம் நினைத்தது நிறைவேறும்.  

 தேவையில்லாத பேச்சால் இந்த ராசியினருக்கு நட்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 30.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

புதிய பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வீடு பராமரிப்பு பணிகள் நிறைவேறும். நண்பர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனையில் தெளிவு பிறக்கும்.   

 தேவையில்லாத பேச்சால் இந்த ராசியினருக்கு நட்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 30.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். வியாபாரப் பணியில் பொறுமை வேண்டும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்பு சிலருக்கு சாதகமாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். சமூகப் பணியில் ஈடுபாடு அதிகரிக்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் நேரிடலாம்.        

 தேவையில்லாத பேச்சால் இந்த ராசியினருக்கு நட்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 30.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

கிண்டல் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கவும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது உத்தமம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். மற்றவர்களின் வார்த்தைகளை நம்ப வேண்டாம். சந்தேக உணர்வால் மகிழ்ச்சியின்மை ஏற்படும். மனதில் குழப்பம் தோன்றி மறையும்.

 தேவையில்லாத பேச்சால் இந்த ராசியினருக்கு நட்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 30.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.       

 தேவையில்லாத பேச்சால் இந்த ராசியினருக்கு நட்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 30.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பணி நிமிர்த்தமான கருத்துகளுக்கு ஆதரவு மேம்படும். பொருளாதார சிக்கல் குறையும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு லாபத்தை அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும்.

 தேவையில்லாத பேச்சால் இந்த ராசியினருக்கு நட்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 30.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக பணியில் விவேகத்துடன் செயல்படவும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைக்க முயல்வீர்கள். குழந்தைகள் சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும்.

 தேவையில்லாத பேச்சால் இந்த ராசியினருக்கு நட்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 30.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். கல்வி பணியில் மேன்மை உண்டாகும். புது வீடு கட்டுவது குறித்து எண்ணம் தொண்டரும். நண்பர்களின் நிலையை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். உடலில் இருந்த பிரச்சனை நீங்கும்.

 தேவையில்லாத பேச்சால் இந்த ராசியினருக்கு நட்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 30.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பூர்வீக பிரச்சனைகள் குறையும். வியாபாரத்திற்காக அலைச்சல் ஏற்படும். முயற்சிக்கான பலன் கிடைக்கும். மனதளவில் புது தன்னம்பிக்கை தோன்றும். செயல்களில் இருந்த தடுமாற்றம் குறையும். அக்கம் - பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.

 தேவையில்லாத பேச்சால் இந்த ராசியினருக்கு நட்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 30.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

சுய முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். இழுபறியான வரவுகள் வந்து சேரும். பயனற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. வியாபார நெருக்கடி விலகும். செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்வீர்கள்.  

 தேவையில்லாத பேச்சால் இந்த ராசியினருக்கு நட்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 30.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத சூழல் உண்டாகும். பயனற்ற அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தேவையில்லாத விவாதத்தை குறைப்பது நல்லது. புது நபர்களிடம் கவனமாக இருக்கவும்.

 தேவையில்லாத பேச்சால் இந்த ராசியினருக்கு நட்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 30.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

திடீர் பயணங்களால் புது அனுபவம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். பழைய விஷயங்களால் குழப்பம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். மனதை வருத்தும் பிரச்சனைக்கு தெளிவு பிறக்கும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்