Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 10.08.2023

Nandhinipriya Ganeshan Updated:
தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 10.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 25 ஆம் நாளுக்கான [10 ஆகஸ்ட் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 10.45 - 11.45 வரை

மாலை: -----

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 10.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

தந்தைவழி உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பழைய கடன்களைத் திருப்பித் தருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். வியாபாரிகள் போட்டியாளர்களைச் சமாளிக்க கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரித்து காணப்படும்.

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 10.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பல வகைகளிலும் அனுகூலமான பலன்கள் நடைபெறும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். திடீர் பண வரவு மனதிற்கு திருப்தியையும், சந்தோஷத்தையும் தரக்கூடியதாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற சில உறவுகள் மீண்டும் ஒன்று சேரலாம். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தொட்டது துலங்கும் நாள்.

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 10.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகப் பணியாளர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உங்களின் பிறந்த வீட்டின் மூலம் நன்மைகள் ஏற்படும். கொடுத்த கடனை திரும்ப பெறுவீர்கள். புதிய வேலை முயற்சிகளிலும், வியாபார முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பல நாட்களாக இருந்து வந்த கனவுகள் நிறைவேறும். 

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 10.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

புதிய நண்பர்களை நம்ப வேண்டாம். தேவையில்லாத விஷயங்களில் மனஸ்தாபம், சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும். சிலருக்கு சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். வியாபாரத்தில் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள்.

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 10.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கை நிறைவேறும். விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள். காதல் வாழ்க்கை மலரும். 

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 10.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் அதை ஒரு தடவைக்கு இருதடவை யோசித்து முடிவெடுக்கவும். அதிக வேலை அழுத்தம் இருக்கலாம். தங்கள் தொழிலில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் சில முக்கியமான வேலைகள் முடிக்க சிரமப்படுவீர்கள். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 10.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எந்த வேலையையும் கவனமாக செய்யவும். கடன் கொடுப்பது, வாங்குவது போன்ற விஷயங்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனக்கசப்புடன் இருப்பதோடு, வேலையைச் செய்வதில் சிரமம் ஏற்படும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் மனக்கசப்பு வரலாம்.

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 10.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பொருளாதாரரீதியாக முன்னேற்றம் உண்டாகும். காரியங்களில் இருந்த தடை, தாமதங்கள் நீங்குவதுடன் புதிய முயற்சிகளும் அனுகூலமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே பாசம் மேலோங்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை சுமுகமாக முடியும். அலுவலகத்தில் இருந்து வந்த அலைச்சல், பணிச்சுமை குறையும். புத்தாடை, நகை வாங்கலாம். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். 

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 10.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நண்பர்களால் நன்மை கிடைக்கும். நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைக்கக் கூடும். பணியிடத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலருக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கடன் வாங்கவேண்டிய அவசியம் ஏற்படும். 

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 10.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவருடன் இணக்கமாக நடந்து கொள்வது அவசியம். பணியிடத்தில் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது. நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். ஆனாலும், அவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இருப்பினும் மனதிற்கு நிறைவான நாளாக இருக்கும்.

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 10.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

எந்த ஒரு செயலையும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை கூடும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் வீட்டில் உற்சாகம் குடிகொள்ளும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொன், பொருள் சேரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். உங்களால் குடும்பத்தின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 10.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள்.  கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும், உடனே நீங்கிவிடும். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். போட்டிகள் குறையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்