Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil Kanni : கன்னி ராசிக்கு கார்த்திக்கை மாதம் குழப்பங்களை தீர்க்குமா...!

Manoj Krishnamoorthi November 09, 2022 & 18:30 [IST]
Karthigai Matha Rasi Palan 2022 In Tamil Kanni : கன்னி ராசிக்கு கார்த்திக்கை மாதம் குழப்பங்களை தீர்க்குமா...!  Representative Image.

கன்னி ராசிக்காரரே 2022 கார்த்திகை  2 இல் கேது, 3 இல் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை,  5 இல் சனி மற்றும் 7 இல் குரு, 8 இல் இராகு, 9 இல் செவ்வாய் சஞ்சாரம் கொள்கிறது. மேலும் மாதம் 17  முதல்  ராசிநாதன் புதன் தைரிய ஸ்தானத்தில் இருந்து 4 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி செய்கிறார். இந்த கிரக நிலை மாற்றங்களால் 2022 கார்த்திகை மாதம் என்ன நிலை உண்டாகும் என்பதை அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும். 

கார்த்திகை மாத ராசிபலன் 2022- கன்னி (Karthigai Matha Rasi Palan 2022 In Tamil Kanni)

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil Kanni : கன்னி ராசிக்கு கார்த்திக்கை மாதம் குழப்பங்களை தீர்க்குமா...!  Representative Image

கன்னி

பொது பலன்:

தைரிய ஸ்தானத்தில் சூரியன் கார்த்திகை மாதம் முழுவதும் இருப்பதால் தொழிலில் துணிச்சலான முடிவுகளை எடுக்க செய்யும். மனதில் தெளிவு பிறக்கும்.  சுக்கிரன் மற்றும் ராசியின் அதிபதி புதன் சுக ஸ்தானத்தில் இருக்கிறார். 

குடும்ப  வாழ்க்கை:

கணவன் மனைவி உறவில் இருக்கும் வேறுபாடு குறையும், விட்டுக்கொடுத்து செல்வது அன்பை அதிகமாக்கும். பகைமை நட்பாக மாறும் யோகம் உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை சரியாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. திருமண முயற்சி கைகூடும். 

தொழில்: 

சுய தொழிலில் நல்ல மாற்றம் நிகழும். வெளியூர் பயணம் ஏற்படும். வருமானத்தை உயர்த்த சந்தர்ப்பம் அமையும். குரு பகவனின் பார்வை லாப் ஸ்தானத்தில் இருப்பதால் தன சேர்க்கை உண்டாகும். 

தேவையில்லாத பேச்சு வார்த்தை குறைத்து கொள்ளுவதால் நல்ல மாற்றம் கிடைக்கும்.  உழைப்புக்கு ஏற்ற புகழ் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த கல்வி கற்கும் நிலை உண்டாகும்.  

உடல்நலம்:

மனதில் இருக்கும் குழப்பம் தெளிவு பெற்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். சிகிச்சையில் இருக்கும் கன்னி ராசிக்காரருக்கு ஆரோக்கியம் மேம்படும்.   

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 4, 5, 6

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்