Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil Simmam: இந்த கார்த்திகை மாதத்தில் இழந்த துணிச்சல் மீண்டும் சிம்மம் அடையுமா....?

Manoj Krishnamoorthi November 09, 2022 & 17:00 [IST]
Karthigai Matha Rasi Palan 2022 In Tamil Simmam:  இந்த கார்த்திகை மாதத்தில் இழந்த துணிச்சல் மீண்டும் சிம்மம் அடையுமா....?Representative Image.

சிம்ம ராசிக்காரரே 2022  3 இல் கேது, 4 இல் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை,  6 இல் சனி மற்றும் 8 இல் குரு, 9 இல் இராகு, 10 இல் செவ்வாய் சஞ்சாரம் கொண்டுள்ள கிரக நிலை மாற்றத்தால் 2022 கார்த்திகை மாதம் என்ன நிலை உண்டாகும் என்பதை அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும். 

கார்த்திகை மாத ராசிபலன் 2022- சிம்மம் (Karthigai Matha Rasi Palan 2022 In Tamil Simmam)

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil Simmam:  இந்த கார்த்திகை மாதத்தில் இழந்த துணிச்சல் மீண்டும் சிம்மம் அடையுமா....?Representative Image

சிம்மம்

பொது பலன்:

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் மற்றும் சுக்கிரன் இருப்பதால் இனி வேலையில் முன்னேற்றம் தான். வியாபாரத்தில் நல்ல நிலை அமையும், செல்வம் சேரும்.  மேலும், சுக ஸ்தானத்தில் சூரியன் தந்தை வழியில் ஆதாயம் பெற செய்யும். 

குடும்ப  வாழ்க்கை:

இல்லறத்தில் நிம்மதி உருவாகும். பெற்றோர் உடன் இருக்கும் கருத்து வேறுபாடு கொஞ்ச கொஞ்சமாக சரியாகும். புதன் சாதகமாக இருப்பதால் காதலால் ஏற்பட்ட பிரச்சனை கார்த்திகை 17 பிறகு சாதகமாகும். புதிய வீடு, வண்டி போன்ற சொத்துகள் அமையும். நட்பு வட்டாரம் பலமாகும். 

தொழில்: 

4 இல் இருக்கும் புதன் கார்த்திகை 17 ஆம் தேதிக்கு பிறகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  சஞ்சாரம் கொள்கிறது, அதே வீட்டிற்கு சுக்கிரன் கார்த்திகை 19 ஆம் நாள் வருவதால் தொழில் தடை நீங்கும். தைரிய ஸ்தானத்தில் இருக்கும் கேது துணிச்சலான முடிவுகள் எடுக்க வைக்கும். தொழிலில் நல்ல மாற்றம் உண்டாகும். 

6 ஆம் வீட்டில் ஆட்சி அமைத்து இருக்கும் சனி புதிய தொழிலை உருவாக்கும்.  பண இழப்பு சரியாகும், சேமிப்பு கூடும். 5 இல் இருக்கும் புதன் கல்வியில் மேன்மை அளிக்கும். 

உடல்நலம்:

வயதான சிம்ம ராசிக்காரர்கள் உடல்நலத்தில் நிதனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனத்தில் செல்லும்போது நிதானமாக இருக்கும்.  

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 2, 3, 4

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்