Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,603.00
-249.94sensex(-0.34%)
நிஃப்டி22,325.80
-76.60sensex(-0.34%)
USD
81.57
Exclusive

Karthigai Matha Rasi Palan 2022 Dhanusu : தனுசு ராசிக்கு கார்த்திகை கஷ்டங்கள் தீரும் மாதமா இருக்கும்.....!

Manoj Krishnamoorthi November 11, 2022 & 22:40 [IST]
Karthigai Matha Rasi Palan 2022 Dhanusu : தனுசு ராசிக்கு கார்த்திகை கஷ்டங்கள் தீரும் மாதமா இருக்கும்.....!Representative Image.

தனுசு ராசிக்காரரே 2022 கார்த்திகை மாதத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்கிர நிவர்த்தியாகி சுகஸ்தானத்தில் உள்ளார். மேலும் 2 இல் சனி மற்றும்  5 இல் இராகு, 6 இல் செவ்வாய், 12 இல் கேது, சஞ்சாரம் கொள்கிறது. அத்துடன் 12 இல் இருக்கும் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை கார்த்திகை  மாதம் 17  தேதி அன்று புதன் மற்றும் கார்த்திகை 19 ஆம் தேதி ஜென்மத்தில் பெயர்ச்சி செய்கிறது. இதனால் தனுசு ராசிக்கு கார்த்திகை மாதம் என்ன மாதிரியான பலன் ஏற்படும் என்பதை அறிய இந்த பதிவை பின்தொடரவும்.  

கார்த்திகை மாத ராசிபலன் 2022- தனுசு (Karthigai Matha Rasi Palan 2022 In Tamil Dhanusu)

Karthigai Matha Rasi Palan 2022 Dhanusu : தனுசு ராசிக்கு கார்த்திகை கஷ்டங்கள் தீரும் மாதமா இருக்கும்.....!Representative Image

தனுசு

பொது பலன்:

ராசியின் அதிபதி குரு சுக ஸ்தானத்தில் இருந்தாலும், சூரியன் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் தொழிலில் அலைச்சல் இருக்கும். ஆனால் கார்த்திகை 17க்கு பிறகு தொழில், குடும்பம் போன்றவையால் நல்ல பலன் கிடைக்கும். 

குடும்ப  வாழ்க்கை:

குடும்பத்தில் சிறிய சச்சரவு வந்து மறையும், இல்லற வாழ்வில் அனுசரித்து செல்வதால் உறவு நலமாக இருக்கும். உறவில் இருக்கும் பிரிவு படிப்படியாக சரியாகும். தாய் வழியில் இருந்த கருத்து வேறுபாடு சரியாகும். 

தொழில்: 

சூரியன் விரைய ஸ்தானத்தில் இருந்தாலும் புதன் மற்றும் சுக்கிரன் மாதத்தின் பிற்பகுதியில்  ஜென்மத்தில் வருவதால்  வேலையில் அலைச்சல் உண்டாகும். ஆனால் கார்த்திகை 17க்கு பிறகு தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் மாதத்தின் பிற்பகுதியில் நல்ல வளர்ச்சி அமையும்.  செல்வ நிலை நன்றாக இருக்கும். 

நீண்ட நாட்களாக இருந்த வழக்கு சரியாகும். வண்டி, வீடு மனை வாங்கும் யோகம் மாதத்தின் பிற்பகுதியில் உருவாகும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பம் அமையும்.  கல்வியில் ஏற்பட்ட குழப்பம் தீர்வு காணும். 

உடல்நலம்:

உடல்நலத்தில் உஷ்ணம் சார்ந்த தொல்லைகள் ஏற்படும்.  தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும், மருத்துவர் ஆலோசனை தேவைப்படும்.  

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 11, 12, 13

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்