Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 04 ஆம் நாளுக்கான [18 மார்ச் 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

ஆசைகள் நிறைவேறும் நாள். சில இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் மூலம் காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

மனதில் எதிர்காலம் தொடர்பான பயத்தோடே காணப்படுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை கொடுக்கும். எனவே, பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தேவையில்லாத பிரச்சனைகளால் எதிரிகள் தோன்றுவார்கள். எனவே, மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அமைதியின் சிகரமாக இருக்க வேண்டிய நாள். தாய்வழி உறவால் குடும்பத்தில் பிரச்சனை வரும். காதலர்கள் சந்திப்பதை தவிர்க்கவும். ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் சிந்தித்து செயல்படவும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம்; அனுசரித்து செல்வது நல்லது. கவலை!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 9

காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதை தவிர்க்கவும். எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள். சிலர் கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடுவீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். இருந்தாலும் புதிய நபர்களிடம் கவனம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துக் கொள்ளவும். பீடை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வியாபாரம் அற்புதம். வெளிநாடு சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாலினத்தவரிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் - மனைவி நெறுக்கம் அதிகரிக்கும். சிலர் புதிய வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டுவீர்கள். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

அனுகூலமான நாளாக இருக்கும். பணியிடத்தில் சகஊழியர்களிம் அன்பாக நடந்துக்கொள்வீர்கள். நண்பர்களுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். வியாபாரத்தில் இருந்த மந்தத்தன்மை விலகி லாபம் அதிகரிக்கும். கூர்மையான ஆயுதங்களை கையாளும் போது சற்று கவனமாக இருக்கவும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் வரலாம். ஆசைப்பட்ட விஷயங்களை செய்து மகிழ்ச்சியடைவீர்கள். நிர்வாகம் சார்ந்த துறைகளில் மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து செயல்படவும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பணியிடத்திலும், வியாபாரத்திலும் மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டை பெறுவீர்கள். எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது உத்தமம். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்துக் கொண்டால் பிரச்சனை இல்லை. பயணத்தின் போது விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனமாக இருக்க வேண்டும். கடனாக கொடுத்த பணம் வசூலாகும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

சிலருக்கு எதிர்காலம் சம்பந்தமான சிந்தனைகள் மேம்படும். பணியிடத்தில் மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புள்ளது. நினைத்த காரியம் நிறைவேறும் நாள். திருமண வாழ்க்கையில் அன்பும், பாசமும் அதிகரிக்கும். சிலருக்கு பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பயணத்தின் போது பணத்தை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும். பூர்வீக சொத்து பாகப்பிரிவினை பிரச்சனை வரும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

அனைவரிடமும் முரணாக நடந்துக்கொள்வீர்கள். திருமண வாழ்க்கையில் கணவன் - மனைவி இடையே கருத்து மோதல்கள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. இல்லையென்றால் சிக்கல் தான். விவசாயம் சார்ந்த தொழில் செய்வோருக்கு லாபம் மிகுந்த நாள். பணியிடத்தில் சகபணியாளர்களுடன் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. பயணங்களை தவிர்ப்பது நல்லது. நோய்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உத்தியோகத்தில் திறமையை வெளிபடுத்துவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த தொழில் செய்வோருக்கு அனுகூலமான நாள். எந்த காரியத்தையும் சுறுசுறுப்பாகவும், விவேகத்துடன் செய்வீர்கள். நண்பர்களுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். பணியிடத்தில் திடீர் பாராட்டு உண்டு. காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. எனவே, தேவையற்ற பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

காதலர்களுக்கு சாதகமான நாள் அல்ல. தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 18.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தேவையில்லாத பிரச்சனைகளால் எதிரிகள் தோன்றுவார்கள். எனவே, மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். சிலருக்கு நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்