Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 07 ஆம் நாளுக்கான [21 மார்ச் 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

குடும்ப உறுப்பினர்களால் சிறு சிறு கருத்து மோதல் தோன்றி மறையும். புதிய நபரால் கணவன் - மனைவி இடையே தேவையில்லாத பிரச்சனை வரும். முக்கியமான பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். வழக்கு சார்ந்த விஷயத்தில் அவரசம் வேண்டாம். முன்கோபத்தால் சில விரயங்கள் நேரிடும். பூர்விக சொத்து விவகாரத்தில் சிக்கல் ஏற்படும். முதலீடு சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பணியிடத்தில் ஊழியர்களை அனுசரித்து நடந்துக்கொள்ளவும். பீடை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பொருளாதார நிலையை பொறுத்தவரையில் அதிக கவனம் தேவை. தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும். பணியிடத்தில் கவனக்குறைவால் தவறுகள் எழ வாய்ப்புள்ளது. பெரிய பிரச்சனையை தவிர்க்க எச்சரிக்கையாக இருங்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். யாரிடமும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். காதலர்கள் சந்திப்பதை தவிர்ப்பது நல்லது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். ஒரு சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். சிலருக்கு தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பணஉதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு தாராளமாகவே உள்ளது. பூர்வீக சொத்துவிஷயத்தில் சாதகமான பலன் கிடைக்கும். நினைத்தது நடக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை வேண்டும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உங்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். தடைப்பட்டு நின்ற காரியங்கள் நடந்து முடியும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் தேடி வரும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் கிடைக்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாலினத்தவரால் சிக்கல் உண்டு. பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்படலாம். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். பகை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எந்த விஷயத்திலும் கவனத்தோடும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். யாருடம் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். தேவையற்ற செலவுகள் வரும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். பிள்ளைகள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். சிலருக்கு  வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். ஆசைப்பட்ட விஷயம் நிறைவேறுவதில் தடை ஏற்படும். எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உதவிகள் கிடைக்காமல் ஏமாற்றம் அளிக்கும். பணிபுரியும் இடத்தில் வீண்பேச்சை தவிர்க்கவும். மனை சார்ந்த பணிகளில் தடை, தாமதம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய பிரச்சனை தலை தூக்கும். நீர்நிலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 2

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

முயற்சிக்கு ஏற்ப பலன் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடந்து முடியும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். பேச்சினால் பிரச்னை வரவாய்ப்பு உள்ளதால் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். எதிரிகள் மற்றும் பழைய கடன்கள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். மனைவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். மனதில் நினைத்த பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். குழந்தைகளால் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் நெருக்கடியான சூழல் ஏற்படும். பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்க்கவும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் மேலிடம் குறித்த பேச்சை தவிர்த்துக் கொள்வது நல்லது. இக்கட்டான சூழ்நிலையை ஈடுசெய்ய கடன் வாங்குவீர்கள். எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 9

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும். சிலருக்கு நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. செல்பேசி மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். உங்களால் உதவி செய்யப்பட்டவர்கள் இப்போது உங்களுக்கு உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 21.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

சந்தோஷத்திற்கு குறை இருக்காது. பெரியவர்கள் ஆசியால் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நல்ல பலனை கொடுக்கும். எந்த செயலையும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செய்வீர்கள். துணையின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். ஒரு புதிய நபரால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்