Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,895.44
899.13sensex(1.23%)
நிஃப்டி22,415.30
291.65sensex(1.32%)
USD
81.57
Exclusive

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. உஷாரா இருங்க.. | Tomorrow Rasi Palan in Tamil | 20.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. உஷாரா இருங்க.. | Tomorrow Rasi Palan in Tamil | 20.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 06 ஆம் நாளுக்கான [20 மார்ச் 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 06.30 - 07.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. உஷாரா இருங்க.. | Tomorrow Rasi Palan in Tamil | 20.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். தாய்வழி உறவினரால் அனுகூலப் பலன் உண்டு. ஒருசிலருக்கு வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உள்ளது. எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். சிலருக்கு வண்டி, மொபைல் ஃபோன் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. உஷாரா இருங்க.. | Tomorrow Rasi Palan in Tamil | 20.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். திடீர் விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் அமோகமாக இருக்கும். சிலர் மனதிற்கு பிடித்த இடங்களுக்கு சென்றும், பிடித்த பொருட்களை வாங்கியும் மகிழ்ச்சி காண்பீர்கள். தொழிலுக்கு எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். தடைபட்டு நின்ற சுபகாரியம் நல்ல முறையில் நடைபெறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் 

அதிர்ஷ்ட எண்: 9

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. உஷாரா இருங்க.. | Tomorrow Rasi Palan in Tamil | 20.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். புதிய பொருள் வாங்குவது சம்பந்தமான எண்ணங்கள் தடைபடும். அஜாக்கிரதை காரணமாக விலைமதிப்பு மிக்க பொருளை இழக்க வாய்ப்புள்ளது. நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. நோய்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. உஷாரா இருங்க.. | Tomorrow Rasi Palan in Tamil | 20.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்சனைகளும் ஏற்படக்கூடும். பணஉதவி கிடைப்பதில் காலத்தாமதம் ஏற்படும். அஜாக்கிரதையால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வரவும் செலவும் சமமாக இருக்கும். எந்த செயலையும் செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக் கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. உஷாரா இருங்க.. | Tomorrow Rasi Palan in Tamil | 20.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்லபேர் கிடைக்கும். மனதில் தன்பிக்கை அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. உஷாரா இருங்க.. | Tomorrow Rasi Palan in Tamil | 20.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும். எனவே எந்த காரியத்திலும் பக்குவமாகவும் புத்திசாலித்தனத்துடனும் சூழ்நிலைகளை கையாள வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். தொழில் சற்று மந்தமாக காணப்படும். கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வாய்ப்புள்ளது. அண்டைவீட்டாரை அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் கோபத்தை காட்ட வேண்டாம். விலங்குகளிடம் இருந்து தள்ளி இருக்கவும். பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. உஷாரா இருங்க.. | Tomorrow Rasi Palan in Tamil | 20.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

தேவையில்லாத சிந்தனை மூலம் தூக்கமின்மை ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் பார்த்து நடந்துக் கொள்ளவும். பயணத்தின்போது பணயிழப்பிற்கு வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் எதிரிகள் அதிகரிப்பார்கள். ரகசியத்தை பகிர்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். விபத்தில் சிக்கல் வாய்ப்புள்ளது வாகன பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்கவும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். பீடை!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. உஷாரா இருங்க.. | Tomorrow Rasi Palan in Tamil | 20.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

சாதகமான நாள். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். எல்லா செயலும் சுறுசுறுப்புடனும், தைரியத்துடனும் ஈடுபடுவீர்கள். பல நாட்களாக இழுத்தடித்த சுபகாரியம் நல்ல முறையில் நடைபெறும். திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். சிலருக்கு கடிதம் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். பணியிடத்தில் சகபணியாளர்களுக்கு பக்கபலமாக இருப்பீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. உஷாரா இருங்க.. | Tomorrow Rasi Palan in Tamil | 20.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு தாராளமாக கிடைக்கும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும், திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கண் மற்றும் பல் சார்ந்த பிரச்சனை ஏற்படலாம். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. உஷாரா இருங்க.. | Tomorrow Rasi Palan in Tamil | 20.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பணியிடத்தில் நேர்மையாக நடந்து, மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். சகஊழியர்களிடத்தில் இருந்துவந்த மனகசப்பு நீங்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே பாசம், நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு சிறப்பாகவே இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். செலவுகள் இருக்கும் ஆனால் பயனுள்ள விஷயத்திற்காகவே இருக்கும். கவலை வேண்டாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் விஷயத்தில் சிந்தித்து ஈடுபடவும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. உஷாரா இருங்க.. | Tomorrow Rasi Palan in Tamil | 20.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் ஆற்றுவீர்கள். பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். மனதில் ஏற்படும் மனகுழப்பத்தை துணையுடன் பகிர்ந்துக் கொள்வீர்கள். பெயர் தெரியாவதர்களிடம் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலன்களை கொடுக்கும். பயணத்தின்போது கவனமாக இருக்கவும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

எது நடந்தாலும் எதிர்மறையாகவே நடக்கும்.. உஷாரா இருங்க.. | Tomorrow Rasi Palan in Tamil | 20.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். ஒருவித செயல்பாடுகளில் தடைகள் ஏற்படும், நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும், இதனால் மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் அவ்வளவாக இருக்காது. முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. துணையிடம் ஈகோவை தவிர்ப்பது நல்லது. மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்