Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்... | Tomorrow Rasi Palan in Tamil | 19.03.2023

Nandhinipriya Ganeshan Updated:
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்... | Tomorrow Rasi Palan in Tamil | 19.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 05 ஆம் நாளுக்கான [19 மார்ச் 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 03.30 - 04.30 வரை

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்... | Tomorrow Rasi Palan in Tamil | 19.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் பெருமை கிட்டும். பணியிடத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கணினி தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த தனவரவு வந்து சேரும். ஒருசிலர் மற்றவர்களின் மூலம் வாழ்க்கை பாடம் கற்றுக் கொள்வீர்கள். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்... | Tomorrow Rasi Palan in Tamil | 19.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உங்களால் முடியும் என்றால் மட்டும் வாக்குறுதி கொடுங்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை கூறும்போது எச்சரிக்கையாக இருங்கள். துணையுடன் விளையாட்டான பேச்சை தவிர்க்கவும். பணப்புழக்கம் சுமாராக தான் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போக வாய்ப்புள்ளது. கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்... | Tomorrow Rasi Palan in Tamil | 19.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

சவால்கள் நிறைந்த நாள். பணியிடத்தில் சகஊழியர்களிடையே திறமையை நிரூபிக்க போட்டி போட்டு வேலை செய்வீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது சிறந்தது. சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும். குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும், முடிந்தவரை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பயம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்... | Tomorrow Rasi Palan in Tamil | 19.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

சந்தோஷத்திற்கு பஞ்சம் இருக்காது. தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். புதிய பெண்களிடம்  பேசும் போது கவனம். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவு வரும். பூர்வீக சொத்து விவகாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்... | Tomorrow Rasi Palan in Tamil | 19.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

தவறுகள் நேர வாய்ப்புள்ளதால், எந்த செயல்களையும் மிக கவனத்தோடு செய்ய வேண்டும். வழக்கு சம்பந்தமான செயல்பாடுகளில் மற்றவர்களின் பேச்சை கேட்காமல் இருப்பது நல்லது. உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ள வேண்டும். பிரியமானவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. வாயை திறக்காமல் இருப்பது நல்லது. சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கும் எண்ணம் கைநழுவி போகும். செலவுகள் மிகுந்த நாள். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்... | Tomorrow Rasi Palan in Tamil | 19.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

நெருங்கிய நண்பர்களின் உதவியுடன், தொழிலில் இரட்டிப்பு லாபம் ஈட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான நாள். ஒருசிலருக்கு வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உள்ளது. எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்... | Tomorrow Rasi Palan in Tamil | 19.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எதிர்கால எண்ணங்களால் குழப்பத்தோடே இருப்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை தரும். மலை சார்ந்த இடங்களுக்கு செல்லும்போது கவனம் தேவை. பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. சகோதரர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்க்கவும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்... | Tomorrow Rasi Palan in Tamil | 19.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி காட்டுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சந்தோச செய்தி காதுக்கு வரும். விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர்க்கு லாபம் மேம்படும். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்... | Tomorrow Rasi Palan in Tamil | 19.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். கணவன்-மனைவி இடையே பாசம், அன்பு, அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இதனால், வாழ்க்கையில் முன்னேறுவதற்காக புதிய வழிகளில் ஈடுபடுவார்கள். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்... | Tomorrow Rasi Palan in Tamil | 19.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வேலை செய்யும் இடத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். அதேபோல், மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தோடு இருப்பது நல்லது. சிலருக்கு அஜாக்கிரதை காரணமாக பண நஷ்டம் ஏற்படலாம். நண்பர்களுடன் சண்டை ஏற்படும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏமாற்றத்தை தரும். நடக்கும்போது கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்... | Tomorrow Rasi Palan in Tamil | 19.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

நீண்ட நாட்களாக இழுபறியான சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களிடம் உங்க குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். ஆசைகள் நிறைவேறும் நாள். மனதில் தன்பிக்கை அதிகரிக்கும். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்... | Tomorrow Rasi Palan in Tamil | 19.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். பணியிடச்சூழல் சுமூகமாக இருக்கும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காதலர்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். செய்த தவறை உணரும் நாள். நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்பச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் அற்புதமாக இருக்கும். பணவிஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்