Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and Temple

Nandhinipriya Ganeshan Updated:
சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and TempleRepresentative Image.

நீதி பகவானாக பார்க்கப்படும் சனி பகவானின் ஆதிக்கம் தான், நம் வாழ்க்கையின் சகலத்துக்கும் காரணம். ஒருவர் தன் கடமை, நேர்மையில் இருந்து தவறும் போது அதற்கான தண்டனையை, சனி பகவான் ஏழரை சனி வரும்போது கடுமையாக தண்டிப்பார். அதனால் தான் சனிப்பெயர்ச்சி என்றாலே நாம் பயப்படுகிறோம். என்ன ஆகுமோ, எப்படி இருக்குமோ? என்று நடுங்குவோம். ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களின் நெஞ்சங்களிலும் பயத்தை கொடுப்பவர் சனி பகவான். 

பொதுவாக, ஜோதிடத்தின் பார்வையில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். அந்தவகையில், 12 ராசிகளையும் கடப்பதற்காக 30 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் சனிபகவான் பெயர்ச்சி அடையும்போது அனைத்து ராசிகளிலும் ஆக்கப்பூர்வமானதாக இருப்பதில்லை. அப்படியாக, வரும் தை மாதம் 3 ஆம் தேதி ஜனவரி 17, 2023 ஆம் ஆண்டு சனி பகவான் மகரம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 

சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and TempleRepresentative Image

அதன்படி, மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, துலாம் புண்ணிய சனி, தனுசு தைரிய சனி என வருவதால், இந்த இராசிக்கார்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடலாம். அவ்வப்போது சனிபகவானை வழிபாடு செய்துவாருங்கள், வாழ்க்கையில் நல்லது நடப்பதற்கும் நன்றியை சொல்லி விட்டு வாருங்கள். அதுவே, கடகம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியும், சிம்மம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியும், கும்பம், மகரம், மீனம் உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியும் ஆரம்பமாகிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியும் ஆரம்பமாகிறது. 

எனவே, இவர்கள் தங்கள் வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகுந்த எச்சரிக்கையுடன் எடுத்து வைக்க வேண்டும். மேலும், கும்ப ராசியில் 26 மாதங்கள் சஞ்சரிக்கும் சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சனி பகவானின் தாக்கத்தில் இருந்த தப்பிக்க பரிகாரம் ஒன்றே வழி. அதன்படி, சனிப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வணங்க வேண்டும் என்று பார்க்கலாம். 

சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and TempleRepresentative Image

மேஷம் [Sani Peyarchi Mesham]

லாப சனி தொடங்குவதால் உங்களுக்கு அற்புதமான நன்மைகள் உண்டாகும். தொட்டது துலங்கும். நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியடையும். நீங்க திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சியில் இருக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஆதிவராகப் பெருமாளை வழிபட்டால், இன்னும் அற்புதமான பலன்களை பெறலாம். அதேபோல், தினமும் சிவ ஆலயத்திற்கு சென்று சிவன் பார்வதி ஆகியோரை வழிபாடு செய்வதும் நல்லது.

சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and TempleRepresentative Image

ரிஷபம் [Sani Peyarchi Rishabam]

தொழில் சனி தொடங்குவதால் பணியில் முன்னேற்றம் உண்டாகும். நீங்க வாலாஜாபேட்டையில் அருள்பாலிகும் பாதாள சனீஸ்வரரை வணங்கினால் நன்மை அதிகம். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்று மங்கலத்தில் இருக்கும் லட்சுமி நாராயணன் சுவாமியை வணங்கலாம். மேலும், சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றலாம். 

சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and TempleRepresentative Image

மிதுனம் [Sani Peyarchi Midhunam]

பாக்யசனி காலம் தொடங்குவதால், இத்தனை நாட்கள் பட்ட அனைத்து கஷ்டங்களும் முடிவுக்கு வரப்போகிறது. அதேபோல், குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். நீங்க ஸ்ரீபெரும்புத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளையும், ஸ்ரீராமானுஜரையும் வழிபட்டு வந்தால், சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் அதிகரிக்கும். மேலும், ஸ்ரீ விநாயகரை வணங்கலாம். அதேபோல், உங்களின் குல தெய்வத்தையும் விடாமல் வணங்குகள். 

சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and TempleRepresentative Image

கடகம் [Sani Peyarchi Kadagam]

அஷ்டமத்து சனி தொடங்க இருப்பதால், கஷ்டங்கள் வந்தாலும் கவலையையே வேண்டாம். மிகுதியான நன்மைகளை பெற நீங்க விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலூகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வழிபடலாம். அதேபோல், குச்சனூரில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை வழிபட்டு வருவது நல்லது. நீங்க திங்கட்கிழமைகளில் சிவன் கோயிலுக்கு சென்று வரலாம். 

சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and TempleRepresentative Image

சிம்மம் [Sani Peyarchi Simmam]

கண்டச்சனி காலம் என்பதால், சச மகா யோகம் கை கூடி வரப்போகிறது. நீங்க வாழ்க்கையில் மேலும் நல்ல பலன்களை அனுபவிக்க காரமடை அருகே இருக்கும் இருளர்பதி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் சுயம்பு பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் நன்மைகள் நடைபெறும். மேலும், புதன்கிழமைகளில் பெருமாள், மஹாலட்சுமியை வணங்கி வரலாம். சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவான், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது. 
 
சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and TempleRepresentative Image

கன்னி [Sani Peyarchi Kanni]

ருண ரோக சத்ரு ஸ்தான சனி உங்களுக்கு அதிகமான நன்மைகளை அள்ளிக்கொடுக்க போகிறார். பட்ட அனைத்து துன்பங்களுக்கும் விடிவு காலம் பிறக்கப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகி ஆரோக்கியம் மேம்படும். நீங்க வாழ்க்கையில் சிறந்த பலன்களை பெற திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமான், அம்பாளையும் வணங்கலாம். 

சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and TempleRepresentative Image

துலாம் [Sani Peyarchi Thulam]

இந்த வருடம் உங்களுக்கு புண்ணிய சனி ஆரம்பமாவதால், பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். அம்மா வழி சொத்துக்கள் உங்களை தேடி வரும். நீங்க மேலும் நன்மைகளை பெற விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வாருங்கள். மேலும், திருவண்னாமலை கிரிவலம் சென்று வந்தாலும் அற்புத நன்மைகளை பெறலாம். மேலும், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ துர்கை ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and TempleRepresentative Image

விருச்சிகம் [Sani Peyarchi Viruchigam]

உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்குவதால் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். மேலும், சனி பகவான் பார்வையும் உங்க ராசிக்கு கிடைக்கிறது. நீங்க பலன்களை பெற வேலூர் மாவட்டம் பெரிய மணலியில் இருக்கும் நாகரத்தினசுவாமி திருக்கோவிலுக்குச் சென்று நாகேஸ்வரசுவாமியை வழிபட்டு வாருங்கள். அதேபோல், ஒருமுறையாவது வாலாஜாபேட்டை பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கிவிட்டு வாருங்கள். தினமும் ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை வழிபட்டு வருவது நல்லது. 

சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and TempleRepresentative Image

தனுசு [Sani Peyarchi Dhanusu]

உங்க ராசிக்கு ஏழரை சனி முடியப்போகிறது. எனவே, நிம்மதி பெருமூச்சு விடுங்கள். அதேபோல், கஷ்டங்கள், கவலைகள் அனைத்தும் முடிவுக்கு வரப்போகிறது. நீங்க பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூரில் உள்ள அருள்மிகு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரரை வழிபாடு செய்யுங்கள். மேலும், திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும் சிவபெருமானையும் அம்பாளையும் வணங்கி வந்தால் வாழ்க்கையில் நிறைய பலன்களை பெறலாம். 

சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and TempleRepresentative Image

மகரம் [Sani Peyarchi Magaram]

உங்களுக்கு ஜென்ம சனி முடிந்து பாதசனி காலம் தொடங்குவதால், பயணம் செய்யும் போது அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். அதேபோல், ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். நீங்க திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரையும் அபிராமியையும் வணங்கலாம். மேலும், சனீஸ்வர பகவானையும் சிவன் பார்வதியையும் தினமும் வழிபாடு செய்யுங்கள். வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கிவிட்டு வாருங்கள். 

சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and TempleRepresentative Image

கும்பம் [Sani Peyarchi Kumbam]

விரைய சனி முடிந்து ஏழரை சனியில் ஜென்மசனி காலம் தொடங்குகிறது. எனவே, சனி பகவானின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். நீங்க ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சனீஸ்வரரின் பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், நீங்க தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கும் குச்சனூரில் சுயம்புவாக அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வழிபட்டு வரவேண்டும். அதேபோல், சனிக்கிழமைகளில் ஸ்ரீ ஆஞ்சநேயரையும், தினமும் ஸ்ரீ சனீஸ்வர பகவானை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். 

சனி பெயர்ச்சி 2023..எந்த ராசிக்காரர் எந்த கோவிலில் உள்ள சனிபகவானை வழிபடணும் | Sani Peyarchi Palan, Parikaram and TempleRepresentative Image

மீனம் [Sani Peyarchi Meenam]

உங்க ராசிக்கு ஏழரை சனி தொடங்குவதால், திடீர் செலவுகள் அதிகரிக்கும். எதை பேச வேண்டுமென்றால், யோசித்து நிதானமாக பேச வேண்டும். அவசரப்பட்டு வார்த்தையை விட கூடாது. சனி பகவானின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் இருக்கும் வாலீஸ்வரரை வழிபாடு செய்து வாருங்கள். மேலும், தினமும் ஸ்ரீ நவக்கிரகம், ஸ்ரீ ஐயப்பன் ஆகியோரையும் வழிபட்டு வாருங்கள். ஒருமுறையாவது, வாலாஜாபேட்டையில் இருக்கும் பாதாள சொர்ணசனீஸ்வரரை வணங்கிவிட்டு வாருங்கள். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்