Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kadagam Love Horoscope In Tamil | கடக ராசிக்கு இந்த ராசியில் காதலர் இருந்தால் வாழ்க்கையே சொர்க்கம் தான்...

Manoj Krishnamoorthi August 27, 2022 & 11:50 [IST]
Kadagam Love Horoscope In Tamil | கடக ராசிக்கு இந்த ராசியில் காதலர் இருந்தால் வாழ்க்கையே சொர்க்கம் தான்...Representative Image.

மென்மையான மனதைக் கொண்ட கடக ராசிக்காரரின் பணிவான  பேச்சும் கண்ணியமான நடத்தையும் இவர்கள் எத்ர்பாலினத்தை எளிதில் கவர்ந்துவிடுவர். அளவான பேச்சின் மூலமே மற்றவர்களின் நம்பிக்கையை பெறும் இவர்கள் பொதுவாக மற்றவர்களிடம் பழக கொஞ்சம் நேரம் எடுப்பர். ஆனால் பழகிவிட்டால் இவரின் மென்மையான குணத்தால் அன்பு கட்டுக்குள் வைத்து கொள்ளுவர். 

அன்பான குணத்தைக் கொண்ட இவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படும்  இளகிய மனம் படைத்த அப்பாவிகள், பொதுவாக அனைத்து ராசிக்கும் சாதகமாக போகும் இவர்களுக்கு ஏற்ற காதலர்கள் எந்த ராசியில் இருந்தால் கடக ராசிக்காரரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.

கடக ராசிக்கு ஏற்ற காதல் ராசிகள் (Cancer Best Match For Love In Tamil)

1. ரிஷபம்

கடக ராசிக்கு ஒரு நல்ல துணையாக ரிஷப ராசிக்காரர் இருக்க முடியும், இவர்களின் உணர்ச்சியை எளிதில் புரிந்து கொள்ளும் குணம் கொண்ட ரிஷப ராசிக்காரர், இவர்களின் சுக துக்கத்தில் துணையாக இருப்பர். இவர்கள் உறவில் பெரும்பாலும் ரிஷப ராசிக்காரரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் கடக ராசி அனுசரணை இன்பமான வாழ்க்கை அளிக்கும். 

2. சிம்மம்

சிம்ம ராசிக்கும் கடக ராசிக்கும் காதல் பொருத்தம் நன்றாக இருக்கும், சிம்ம ராசியின் அக்கறை கடகத்துக்கு ஒரு பாதுகாப்பான சூழலையும் உறவில் நம்பிக்கையும் எளிதில் உருவாக்கிவிடும். ஆனால் இவர்கள் உறவில் கோபத்தால் சில மன வருத்தம் ஏற்படும்.

3. விருச்சிகம்

கடகம் மற்றும் விருச்சிகம் இரண்டும் நல்ல ஜோடியாகும், இரு ராசிகளும் நீர் ராசி என்பதாலும் ஒருவரின் ஆசையை இன்னொருவர் புரிந்து நடந்து கொள்ளும் அன்னியோன்னியம் இருக்கும். வெளிப்படையான குணம் கொண்ட கடக ராசிக்கு தீவிரமாக காதல் செய்யும் குணம் கொண்ட விருச்சிக ராசிக்காரர் நடுவில் நம்பிக்கையான உறவு இருக்கும். 

4. மகரம்

கடக ராசிக்காரரின் யதார்த்த மனதிற்கு கலகலப்பான் மகர ராசிக்காரர்கள் சிறந்த ஜோடியாக இருக்கும். கடக ராசிக்காரரின் உணர்வுகளுக்கு மகர ராசிக்காரரின் கரிசனை மிகவும் பலமாக இருக்கும். 

5. மீனம்

கடகம் மற்றும் மீன ராசிக்கு நல்ல மனப்பொருத்தம் இருக்கும். இவர்களுக்குள் நல்ல நட்பு இருக்கும். கடக ராசிக்காரருக்கு மீன ராசிக்காரரின் மூலம் அதீத நன்மைகள் கிடைக்கும். இந்த உறவில் மீன ராசியில் கை கொஞ்சம் ஓங்கி இருக்கும்.

மேலும், மற்ற ராசிகளின் காதல் ஜோதிடம் பற்றி அறிய கீழே உள்ள அட்டவனையை பின்பற்ற வேண்டும்.

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்