Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,896.13
-47.55sensex(-0.07%)
நிஃப்டி22,134.85
-13.05sensex(-0.06%)
USD
81.57
Exclusive

Magaram Love Horoscope In Tamil : மகர ராசிக்காரருக்கு இந்த ராசியில் துணை அமைந்தால் வாழ்க்கை ஜாலி தான்...!

Manoj Krishnamoorthi November 02, 2022 & 11:15 [IST]
Magaram Love Horoscope In Tamil : மகர ராசிக்காரருக்கு இந்த ராசியில் துணை அமைந்தால் வாழ்க்கை ஜாலி தான்...!Representative Image.

நளினமான பேச்சால் அனைவரையும் குணம் கொண்ட மகர ராசிக்காரரை பெரும்பாலும் அனைவருக்கும் பிடிக்கும். கலகலப்பான குணம் நகைச்சுவையான பேச்சு என அனைத்திலும் முதன்மை கொண்ட மகர ராசிக்காரர் மீது மற்ற ராசிகள் ஒரு ஈர்ப்புடனே இருக்கும். மற்றவர்களை கவரும் மகர ராசிக்காரர்களுக்கு எந்த ராசிக்காரர்கள் சிறந்த காதல் ஜோடியாக இருப்பர் என்பதை காணலாம். 

 

Magaram Love Horoscope In Tamil : மகர ராசிக்காரருக்கு இந்த ராசியில் துணை அமைந்தால் வாழ்க்கை ஜாலி தான்...!Representative Image

மகர ராசிக்கு ஏற்ற காதல் ராசிகள் (Magaram Love Horoscope In Tamil)

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு மனிதன் பிறந்த நேரத்தின் அடிப்படையில் ஜாதகம் கணிக்கப்பட்டு அவன் வாழ்க்கை தீர்மானிக்கும். இந்த ஜாதகத்தில் ஒவ்வொரு மனிதனின் குணம் முதல் அனைத்தும்  கண்டறிய முடியும். அதுபோல எந்த ராசிக்கு எந்த ராசிக்காரர் சரியான துணையாக இருப்பர் என்பதை அறியலாம், இந்த பதிவு மகர ராசிக்கு சிறந்த ஜோடியாக அமையக்கூடிய ராசிகள் எது என்பதை கொடுக்கப்பட்டுள்ளது.  

1. ரிஷபம்

பொதுவாக மகரம் மற்றும் ரிஷபம் இரு ராசியில் பிறந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பர். இவ்விரண்டு ராசிகளும் பூமி ராசியாக இருப்பதால் மன பொருத்தம் நன்றாக இருக்கும், இவர்கள் உறவில் அமைதியான புரிதல் என்பது இருந்து கொண்டே இருக்கும்.   

2. கன்னி

மகரத்தின் அறிவாற்றல் கன்னி ராசியை எளிதில் ஈர்த்துவிடும். மகரம் மற்றும் கன்னி ராசி ஆகிய இரண்டு ராசிக்கும் நல்ல நட்பு இருக்கும். இந்த உறவில் கன்னி வேகமாக இருக்கும் ஆனால் மகரம் நிதானமாக இருப்பதால் விட்டுக்கொடுத்து செல்லுதல் நன்மை அளிக்கும். மகரத்தின் அக்கறை குடும்ப வாழ்வில் நல்ல துணையாக கன்னி ராசிக்கு இருக்கும். 

3.விருச்சிகம்

மகரம் மற்றும் விருச்சிக ஆகிய இரண்டு ராசிக்கும் நல்ல பொருத்தம் இருக்கும். உறவில் அன்யோன்யம் குறைவாக இருந்தாலும் நல்ல புரிதல் இருப்பதால் காதல் எளிதில் மலரும்.  விருச்சிக ராசியில் செவ்வாய் உச்சம் கொள்வதால் மகரத்துடன் அமைதியான உறவு கிடைக்கும்.  

4. மீனம்

மகரத்திற்கு மீன ராசி ஓரளவு நல்ல பொருத்தமாக அமையும். நட்பு இருக்கும் அளவு காதல் அதிகமாக நீண்ட காலத்திற்கு வருவதில் அவ்வப்போது சிக்கல் வரும். எனவே, மகரத்தின் பிடிவாதத்திற்கு மீன ராசி சற்று அனுசரித்தால் உறவு நன்றாக இருக்கும். 

மேலும், மற்ற ராசிகளின் காதல் ஜோதிடம் பற்றி அறிய கீழே உள்ள அட்டவனையை பின்பற்ற வேண்டும்.

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்