Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,895.44
899.13sensex(1.23%)
நிஃப்டி22,415.30
291.65sensex(1.32%)
USD
81.57
Exclusive

Mithunam Love Horoscope In Tamil | மிதுன ராசிக்கு நல்ல ஜோடியாக இருக்கும் ராசிகள்…

Manoj Krishnamoorthi August 22, 2022 & 15:30 [IST]
Mithunam Love Horoscope In Tamil | மிதுன ராசிக்கு நல்ல ஜோடியாக இருக்கும் ராசிகள்…Representative Image.

பல கலைகளில் வல்லவரான மிதுன ராசிக்காரர்கள் காதல் வயப்படுவது மிகவும் எளியதாகும், பொதுவாக இவர்களுக்கு காதல் வரிசையாக வரும் எனவும் கூறலாம். இதற்கு காரணம் மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களை விட தன்னைத்தானே விரும்பும் குணம் கொண்டவர்கள், எனவே இவர்களுக்கு மற்றவர்கள் மீது  காதல் ஆர்வம்  நிலையாக இருக்காமல் காலப்போக்கில் மறையும். ஆனால் ஒரு சில ராசிக்காரர்கள் இவரை தன் காதல் வலையில் நிலையாகக் கட்டி வைத்து கொள்ளும் பலம் புரிந்தவர்கள். அவை எந்தெந்த ராசிகள் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா.... எங்கள் பதிவைப் பின்தொடரவும்.

மிதுன ராசிக்கு ஏற்ற காதல் ராசிகள்(Mithunam Best Match Rasi In Tamil)

இயற்கையாகவே முகத்தில் வசீகரம் கொண்ட மிதுன ராசிக்காரர்கள், மற்ற  ராசிகளின் கவனத்தை ஈர்த்துவிடுவர். இவர்களின் யதார்த்தமான நடவடிக்கையால் மற்றவர்கள் இவரை காதலிக்கும் வகையில் இருப்பர்,கீழ்வரும் ராசிக்காரர்கள் மிதுன ராசிக்கு சிறந்த ஜோடியாக அமையும்.

1. கன்னி

கன்னி ராசி மிதுன ராசிக்கு நல்ல பலன் அளிக்கும், இவ்விரண்டு ராசிக்காரர்களுக்கு புதன் பகவானின் ஆசி முழுமையாகக் கிடைப்பதால் சிறந்த துணையாக ஒருவருக்கு ஒருவர் இருக்க முடியும். அறிவு தன்மை இந்த ராசிக்காரர்களுக்கு அதிகமாக இருப்பதால் சில சமயம் கருத்து மோதல் ஏற்படலாம். இந்த ஜோடிகளுக்கு பெரும்பாலும் பண பிரச்சனைதான் ஒரு தொல்லையாக இருக்கும் மற்ற வகையில் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். 

2. துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களின் நிலையைப் புரிந்து நடந்து கொள்வதில் வல்லவர்கள், எனவே மிதுனத்துக்கு துலாம் ராசி சிறப்பான ஜோடியாக இருக்கும். இவ்விரு ராசியும் திருமணத்தில் இணைந்தால் மகிழ்ச்சி ததும்பும்.

3. கும்பம்

இந்த இரண்டு ராசிக்காரர்களின் சிந்தனையும் ஒத்து போவதால் இவர்களால் வாழ்வில் பல தருணங்களில் ஒன்றாகப் பயணிப்பர். செயலாற்றல் நிறைந்த கும்பம் அறிவாற்றல் நிறைந்த மிதுனத்துக்கு நல்ல காதல் ஜோடியாக அமையும்.   

4. மீனம்

மிதுனம் மற்றும் மீனம் ஓரளவு நல்ல ஜோடியாக இருக்க முடியும், இந்த இரண்டு ராசிக்காரர்களுள் பெரியதாகக் கருத்து வேறுபாடு வராது. 

மேலும், மற்ற ராசிகளின் காதல் ஜோதிடம் பற்றி அறிய கீழே உள்ள அட்டவனையை பின்பற்ற வேண்டும்.

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்